தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டத்தின்படி இனி தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தராதேவி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: , 2018-19-ஆம் கல்வியாண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கும், 2019-2020-ஆம் கல்வியாண்டு முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கும் புதிய பாடத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மார்ச் 2020 பருவம் முதல் நடத்தப்படும் 10, 11, 12- ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் புதிய பாடத் திட்டத்தின்படி மட்டுமே நடத்தப்படும். மார்ச் 2020 பருவம் முதல் பழைய பாடத்திட்டத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படாது.

ஏற்கெனவே பழைய பாடத்திட்டத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி தேர்ச்சி பெறாத தேர்வர்கள், தேர்ச்சி பெறாத, வருகை புரியாத பாடங்களை மட்டும் புதிய பாடத்திட்டத்தின் கீழ், மார்ச் 2020 பருவம் முதல் நடைபெறும் தேர்வுகளில் எழுதிக் கொள்ளலாம்' எனக் கூறப்பட்டுள்ளது.



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here