*.* தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கக்கூடிய புதிய கல்விக்கொள்கை குறித்து விவாதிப்பதற்காக வரும் 22 ஆம் தேதி டெல்லியில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக மாநில கல்வி அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கைக்கான வரைவு அரசு வலைதளங்களில் வெளியிடப்பட்டு இந்த மாதம் இறுதிவரை பொதுமக்களின் கருத்துகளை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு கட்டங்களாக ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் தான் டெல்லியில் 22 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதில் புதிய வரைவில் ஏதேனும் மாற்றம் கொண்டுவரவேண்டுமா என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்வார்கள். தங்களது தரப்பு கருத்துகளையும் மாநில அமைச்சர்கள் முன் வைப்பார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் சொல்லப்படக்கூடிய கருத்துக்கள் ஏற்புடையவையாக இருந்தால் புதிய கல்விக்கொள்கையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு இறுதி வடிவம் பெறும். மும்மொழிக்கொள்கை குறித்து தமிழகத்தில் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வரும் நிலையில் இந்த வாய்ப்பை தமிழக அரசு சரியாக பயன்படுத்தி கொள்ளும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here