எம்.பி.பி.எஸ், மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ- மாணவிகள் அரசு மருத்துவ கல்லூரிகளில் இலவசமாக படிக்க முடியும். நாடு முழுவதும் கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வு முடிவு நேற்று வெளியானது.

இதையடுத்து ஒவ்வொரு மாநிலமும் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையை துரிதப்படுத்தியுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை எம்.பி.பி.எஸ், மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேருவதற்கு நாளை (7-ந்தேதி) முதல் விண்ணப்பிக்கலாம். இந்த வருடம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறையின் இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தினை பதவிறக்கம் செய்து பின்னர் பூர்த்தி செய்து சென்னையில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் வருகிற 20-ந்தேதி மாலைக்குள் சென்னைக்கு வந்து சேர வேண்டும்.

இதையடுத்து, மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்களை,

www.tnhealth.org 


மற்றும்,

www.tnmedicalselection.net 


Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here