சோதனை முயற்சியாக பீட்டா வெர்ஷனில் டார்க் மோடை (Dark Mode) வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது

உலகளவில் தற்போது அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் வாட்ஸ்அப் செயலியும் ஒன்று. செய்திகளை அனுப்புதல், வீடியோ, புகைப்படங்களை பகிர்தல், வீடியோ காலிங், வாய்ஸ் காலிங் போன்ற பல்வேறு வசதிகளை வாட்ஸ் அப் கொண்டுள்ளது. வீடியோ, போட்டோ, கோப்புகள் என பல முக்கிய விஷயங்கள் வாட்ஸ் அப் மூலம் பகிரப்படுகிறது. பயனாளர்களுக்கு வசதியாகவும், பாதுகாப்பு அம்சங்களுக்காகவும் வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது அப்டேட்டுகளை விடுத்து வருகிறது

வாட்ஸ் அப் அப்டேட்டில் பயனாளர்கள் அதிகம் எதிர்பார்க்கும் அப்டேட்டாக டார்க் மோட் உள்ளது.

ட்விட்டர், பேஸ்புக் மெசேஞ்சர், அமேசான் கிண்டில் போன்ற ஆப்கள் ஏற்கெனவே டார்க் மோட் வசதியை அறிமுகப்படுத்திவிட்ட நிலையில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் இன்னும் அறிமுகம் செய்யவில்லை. ஆனால் விரைவில் டார்க் மோட் வசதி அறிமுகம் செய்யப்படும் வாட்ஸ் அப் தெரிவித்திருந்தது. அதன்படி சோதனை முயற்சியாக பீட்டா வெர்ஷனில் டார்க் மோடை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது

ஆண்ட்ராய்ட் Q வெர்ஷனில் வாட்ஸ் அப் பீட்டா பயன்படுத்தும் பயனாளர்களுக்கு டார்க் மோட் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் கொடுத்துள்ளது. அதற்கு Settings -> Display -> சென்று டார்க் மோட் ஆப்ஷனை பயன்படுத்தலாம். அதே போல iOS 11 அல்லது iOS 12 பயன்படுத்துவோர், Settings -> General -> Accessibility சென்று டார்க் மோட் ஆப்ஷனை பயன்படுத்தலாம்

டார்க் மோட் ஆப்ஷனை வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது சோதனை முறையிலேயே அறிமுகம் செய்துள்ளது. அதனால் டார்க் மோட் ஆப்ஷனில் சில சிக்கல்கள் எழலாம் என்றும் முழு அளவில் தயாரான பின்னரே அதிகாரப்பூர்வ அப்டேட்டாக டார்க் மோட் இருக்குமென்றும் வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது


Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here