தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின்போது பள்ளிக் கல்வித் துறை தொடர்பான புதிய திட்டங்கள் குறித்து அறிவிக்கப்படும் என்றார்.
அரசுப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் திட்டத்தை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை வேளச்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் புதன்கிழமை தொடங்கிவைத்தார். 
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 
பள்ளி மாணவர்கள் 70 லட்சம் பேருக்கு பெயர், முகவரி, ரத்த வகை, கல்வித்தரம் உள்பட பல்வேறு தகவல்கள் அடங்கிய ஸ்மார்ட் அட்டை வழங்கும் திட்டத்தை முதல்வர் வியாழக்கிழமை சென்னையில் தொடங்கி வைக்கவுள்ளார். 
தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் இருந்ததன் காரணமாகவே பள்ளிசீருடை வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது.
கடந்த ஆண்டுகளில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் தொடங்கும்போதே பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. புதிய தேர்வு திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதால், மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு தேர்வு அட்டவணை அறிவிக்கப்படும். சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின்போது பள்ளிக் கல்வித் துறைக்காக பல்வேறு புதிய திட்டங்கள் குறித்து அறிவிக்கப்படும் என்றார்.


Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here