சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு, வாரம் ஒரு நாள் யோகா பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை அமல்படுத்த வேண்டுமென்றால், அதற்கு யோகா பயிற்றுனர்கள் அல்லது ஆசிரியர்களை தற்காலிகமாகவோ நிரந்தர பணியிலோ, தொகுப்பூதிய அடிப்படையிலோ பணியமர்த்த வேண்டும்.
அமைச்சரின் இந்த அறிவிப்பால், தமிழக பள்ளிகளில் விரைவில் யோகா ஆசிரியர்கள் நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. யோகாவில் பட்டம், பட்டயம் பெற்றுள்ளவர்களுக்கு அரசுப் பணி கிடைக்க வாய்ப்பிருப்பதாக, யோகா பயிற்றுனர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here