*✍✍தேர்வு நடைபெற்ற 119 மையங்களில், 3 மையங்களில் மட்டுமே தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வு நிறுத்திவைக்கப்பட்டது - ஆசிரியர் தேர்வு வாரியம்*

*✍✍நிறுத்திவைக்கப்பட்ட 3 மையங்களிலும் தேர்வு நடைபெறும் தேதி இன்று அறிவிக்கப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்*

*✍✍திருச்செங்கோட்டில் தேர்வு முடிந்த பின்பு, தேர்வு மையத்திற்குள் செல்போன் அனுமதிக்கப்பட்டது குறித்து ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து விசாரிக்கப்படும்-ஆசிரியர் தேர்வு வாரியம்*

*✍✍முறைகேடுகள் ஏதும் நடைபெற்றிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்-ஆசிரியர் தேர்வு வாரியம்*

*✍✍✍தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரு சில இடங்களில் ஆசிரியர் தேர்வு நிறுத்தப்பட்டது: டிஆர்பி தலைவர் விளக்கம்*

*ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கணினி பயிற்றுனர் தேர்வு ரத்தான பிறகே வீடியோ எடுத்துள்ளார் என டிஆர்பி தலைவர் விளக்கமளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் வெங்கடேஷ், தேர்வுமையத்தில் செல்போன்களுடன் தேர்வர்கள் இருப்பது போன்ற வீடியோ பற்றி விளக்கம் அளித்தார். சர்வர் பிரச்சனை காரணமாக தேர்வு ரத்தான பின்பு திருச்செங்கோடு தனியார் கல்லூரி மையத்தில் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. சர்வர் பிரச்சனையால் ரத்து செய்யப்பட்ட 3 மையங்களிலும் மறுதேர்வு நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.*Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here