புதுக்கோட்டை,ஜீலை.29: புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிக்கல்விதுறை சார்பில்
அமைச்சுப் பணியாளர்களுக்கு நடைபெற்ற கலந்தாய்வில் 21 பேருக்கு பணிமாறுதல் ஆணைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி வழங்கி அறிவுரை வழங்கினார்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணைஇயக்குநர் எஸ்.நாகராஜன்( பணியாளர்  தொகுதி) அவர்களின் செயல்முறையின் படி 30.06.2019 அன்றைய நிலையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பணியிடத்தில் பணிபுரிபவர்களுக்கு பணிமாறுதல் வழங்குவது சார்ந்து அறிவுரை வழங்கப்பட்டிருந்தது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அமைச்சுப் பணியிடங்களுக்கும் கண்காணிப்பாளர்கள், இளநிலை உதவியாளர்/ தட்டச்சர் ஆகிய பதவிகளுக்கு  புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில்  பணிமாறுதல் கலந்தாய்வு திங்கட்கிழமை நடைபெற்றது.

மாறுதலில் மாவட்டத்தில் உள்ள கண்காணிப்பாளர்கள் 3 பேர்,உதவியாளர்கள் 7 பேர்,தட்டச்சர்கள் 6 பேர் ,இளநிலை உதவியாளர் 5 பேர் என மொத்தம் 21 பேர் கலந்து கொண்டனர்.

பணி மாறுதலில் கலந்து கொண்ட 21 பேருக்கும் அரசின் விதிமுறைகளை பின்பற்றி எந்தவித புகாருக்கும் இடமின்றி பணிமாறுதல் ஆணைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி பணிமாறுதல் ஆணைகளை வழங்கினார்.பின்னர் மாறுதல் பெற்றுள்ள அனைவரையும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

நிகழ்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்  ( மேல்நிலை) ஜீவானந்தம்,நேர்முக உதவியாளர் ( உயர்நிலை) கபிலன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Join Whats App Group Link -Click Here


Join Telegram Group Link -Click Here