🕴🕴🕴🕴🕴🕴🕴🕴🕴👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻*இன்றைய திருக்குறள்*

*குறள்-106*

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
 துன்பத்துள் துப்பாயார் நட்பு.

*விளக்கம்*

குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது.

✡✡✡✡✡✡✡✡

*பழமொழி*

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்.

Too much of anything is good for nothing.

✳✳✳✳✳✳✳✳

*பொன்மொழி*

பணம் ஒரு அத்தியாவசியமான பொருள். ஆனால் மனித உழைப்பிற்கு முன்னால் அது கீழ்த்தரமானது.

✍✍✍✍✍✍✍✍

1. கடக ரேகை எந்த மாநிலத்தின் வழியாகச் செல்கிறது ?

பீகார்

2. இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?

 1935

🧬🧬🧬🧬🧬🧬🧬🧬

*Today's grammar*

This list contains both homophones and homographs.

ade - drink type, as in lemonade

aid - to help or assist
aide - assistant

affect - change
effect - result or consequence

air - atmosphere (the stuff we breathe)
err - to make a mistake

📫📫📫📫📫📫📫📫

*பழமொழி மற்றும் விளக்கம்*

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா தன் பிள்ளை தானே வளரும் .

*நாம் அறிந்த விளக்கம்* :

மற்றவர்களுக்கு நாம் செய்யும் நன்மையின் தன்மை நம்மையும் நம் குடும்பத்தையும் அதே நன்மையின் தன்மை கொண்டு உயர்த்தும் என்பது இதன் உண்மை விளக்கம் அல்ல.

*விளக்கம்*:

ஊரான் பிள்ளை என்பது தம் மனைவியை குறிக்கும். அவள் பிள்ளை சுமந்திருக்கும் காலத்தில் அவளை அவள் கணவன் நல்ல முறையில் பராமரிப்பான் எனில் அம்மனைவி வயிற்றில் வளரும் அவனது குழந்தையும் ஆரோக்கியமாக நலமுடன் வளரும். இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

*துணிச்சலான சிறுவன்*

 ஒரு ஊரில் சிறுவன் ஒருவன் மிகவும் சுட்டித்தனமாக இருந்தான். ஒரு நாள் அவனும் அவனது நண்பர்களும் சேர்ந்து ஒரு மரத்திலே ஏறி தலை கீழாகத் தொங்கி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

 ஆபத்தான இந்த விளையாட்டைப் பார்த்த அந்தப் பையனுடைய தாத்தா கீழிறங்கி வாருங்கள் என்று சப்தம் போட்டார்.

 அவர்கள் வந்ததும் இந்த மரத்திலே ஒரு பேய் இருக்கிறது. அதனால் கீழேயே விளையாடுங்கள் என்று பயமுறுத்தினார். இதைக் கேட்டு எல்லா சிறுவர்களும் பயந்துவிட்டார்கள். ஆனால் சுட்டிப் பையன் சரி சரி என்று தலையை ஆட்டிவிட்டு மறுபடியும் மரத்திலே ஏற ஆரம்பித்தான்.

 அவனது நண்பர்கள் ஏறாதே பேய் உன்னை அடித்துவிடும் என்று கத்தினார்கள். இந்த மரத்திலே பேய் இருந்திருந்தால் இன்னேரத்துக்கு அது நம்மை அடித்துக் கொன்றிருக்கும். தாத்தா நம்மைப் பயமுறுத்தியிருக்கிறார். என்று கூறினான்.

 அதற்கு மற்ற சிறுவர்கள் உன் தாத்தா சொன்னபோது சரி என்று சொன்னாய் அது ஏன்? என்று கேட்டனர். எதிர்த்துப் பேசினால் அவர் மனது கஷ்டப்படுமே. அதனால் தான் அவரை சமாதானப்படுத்த சரி என்றேன். என்று நண்பர்களிடம் கூறிக்கோண்டே மரத்தில் ஏறினான்.

நீதி :
தைரியத்துடன் இருத்தல் வேண்டும்.

🧾🧾🧾🧾🧾🧾🧾🧾

*செய்திச் சுருக்கம்*

🔮முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

🔮அத்திவரதர் வைபவம்: காஞ்சீபுரம் நகர பள்ளி - கல்லூரிகளுக்கு 13, 14, 16 ஆகிய தேதிகளில் உள்ளூர் விடுமுறை.

🔮கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் களிமண் தாதுக்களை கண்டறிந்து உள்ளது.

🔮சிங்காரச் சென்னையையும் சுந்தர ஐதராபாத்தையும் ஒரு மணி நேரம் 10 நிமிடங்களுக்குள் இணைக்கும் இடைநில்லா விமானச் சேவை இன்று தொடங்கியது.

🔮93 வது அகில இந்திய முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 8 வரை சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

🔮மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம்-சென்னை வானிலை ஆய்வு மையம்.

🔮ECONOMYRBI allows round-the-clock fund transfers under NEFT from December.

🔮Last rites of Sushma Swaraj performed with state honours; PM & top leaders pay homage.

🔮Southern Karnataka on red alert as 15 districts across state hit by floods.

🔮England star James Anderson vows to return before Ashes end.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

*தொகுப்பு*

T. தென்னரசு,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
TN டிஜிட்டல் டீம்,
திருவள்ளூர் மாவட்டம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷