
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவியாளர்
காலியிடங்கள்: 130
சம்பளம்: மாதம் ரூ.14,000 - 47,500
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி பெற்றிருப்பதுடன் கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.250. கட்டணத்தை காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகம் அல்லது கிளைகலில் நேரடியாகச் செலுத்தி, அவ்வாறு செலுத்தப்பட்ட விண்ணப்பக் கட்ட ரசீதியில் உள்ள Journel ID என்ற எண்ணை விண்ணப்பதாரர், தமது விண்ணப்பத்தில் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் குறிப்பிட்டு கட்டணம் செலுத்திய ரசீதை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தேர்வு கட்டணத்தை ஆன்லைன் மூலம் எஸ்பிஐ வங்கி இணையதளத்தில் உள்ள "SBI Collect" என்ற சேவையைப் பயன்படுத்தியும் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.kpmdrb.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 13.10.2019 பிற்பகல் 2 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை நடைபெறும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.kpmdrb.in/doc_pdf/Notification_2.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.09.2019
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..