விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் க.மடத்துப் பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்  மாணவர்களுக்கு காலை இணை உணவுத் திட்டம் வழங்கி  அசத்தி வருகிறார்கள்.இப்பள்ளியில்   காலை இணை உணவுத் திட்டமானது ஆகஸ்ட் 16 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது.
மாணவர்களுக்கு ஆரோக்கிய உணவுகளான கடலை மிட்டாய், பாசிப்பயறு, முளைகட்டிய பயறு வகைகள், பழங்கள்  வாரம் இரு முறை வழங்கி வருகிறார்கள்.

முதல் நிகழ்வினை வெம்பக்கோட்டை வட்டாரக் கல்வி அலுவலர் வெங்கட சாமி துவக்கி வைத்துப் பேசியதாவது; ஆரோக்கியமான உணவுகளை என்பதே  உடலுக்கு நன்மை தரும்.உடலுக்கு கேடு தரும் ஜங்க்புட் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இதனை செயல் படுத்தி வரும் ஆசிரியர்களின் பணி பாராட்டுக்குரியதாகும் என்றார்.

தலைமைஆசிரியர் யசோதாதேவி வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். அரசுப் பள்ளியின் இத்தகைய நிகழ்விற்கு ஊக்கம் தரும் வகையில்  சாத்தூர் பத்ம சங்கீதம் இசைப் பள்ளியின் இயக்குநர் சங்கீதாகணேஷ்   அனைத்து மாணவர்களுக்கும் தனது பங்களிப்பாக கடலைமிட்டாய்கள்  வழங்கிஊக்குவித்தார்.துபாயிலிருந்து ரவி சொக்கலிங்கம் தனது பங்களிப்பாக ரூபாய் ஆயிரம் வழங்கியுள்ளார்.தொடர்ந்து இச் சேவையில் சென்னையைச் சார்ந்த இரயில் கரங்கள் அமைப்பும், கனடாவில் இருந்து முருகானந்தன் என்பவரும் இணைந்துள்ளனர்.
தங்கள் ஊர்ப் பள்ளியில் இத்தகையதொரு சிறப்பான திட்டத்தை செயல்படுத்திய ஆசிரியர்களுக்கு ஊர் மக்கள் பாராட்டு தெரிவித்தனர்..