🕴🕴🕴🕴🕴🕴🕴🕴👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻*இன்றைய திருக்குறள்*

*குறள் எண் - 190*

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
 தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

மு.வ உரை:

அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டே??.

கருணாநிதி  உரை:

பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை:

புறம்பேச அடுத்தவர் குற்றத்தைப் பார்ப்பவர், பேசும் தம் குற்றத்தையும் எண்ணினால், நிலைத்து இருக்கும் உயிர்க்குத் துன்பமும் வருமோ?.

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*

கற்பனை மிகுந்த புதுப்புது படைப்பு தான் மனித எண்ணங்களின் அஸ்திவாரம். அது எப்போதும் தொடர்ச்சியான பரிமாணத்தின் வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும்.

  - அப்துல் கலாம்

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*Important  Words*

 Mango மாம்பழம்

 Mint புதினாக்கீரை

 Mosambi சாத்துக்குடி

 Mushroom காளான்

 Myrobalan நெல்லிக்காய்

♻♻♻♻♻♻♻♻

*பழமொழி மற்றும் விளக்கம்*

*நேற்று வெட்டின கிணற்றிலே முந்தாநாள் வந்த முதலை போல*.

நாம் அறிந்த விளக்கம் :

கிணறே நேற்றுதான் வெட்டியது அப்படியிருக்க அதில் முந்தாநாள் முதலையைப் பார்த்ததாகச் சொல்வது எங்ஙனம். இதுவே நாம் அறிந்த விளக்கம் ஆகும்.

விளக்கம் :

சமீபத்தில் தெரிந்து கொண்டதை ரொம்பநாள் தெரிந்தவன் போலப் பேசும் ஒருவருக்காக கூறுவது தான் இந்த பழமொழி. இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.

✍✍✍✍✍✍✍✍

*பொது அறிவு*

1) டெல்லியின் பழங்காலப் பெயர்?

*இந்திர பிரஸ்தம்*

2)  இந்தியாவில் எந்த மாநிலத்தில் என்ரான் மின்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது?

*மகாராஷ்டிரா*

📫📫📫📫📫📫📫📫

*விடுகதை*

1. கொதிக்கும் கிணற்றில் குதித்து குண்டாகி வெளியே வருவான். அவன் யார்?

*பூரி*

2.இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல! வேகமாய் ஓடும் ,மான் அல்ல! கால்கள் உண்டு , மனிதனல்ல! அவன் யார்?

*சைக்கிள்*

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

*ஆசைக்கும் எல்லை உண்டு!*

ஒரு காட்டு அதிகாரி இருந்தார். அவருக்கு அழகான ஒரு மகள் இருந்தாள். ஒரு நாள் பட்டாம்பூச்சியைத் துரத்திக்கொண்டே அந்தப் பெண் காட்டிற்கு சென்றாள்.

அப்போது அவளை பார்த்த ஒரு சிங்கத்திற்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித்துப்போய் விட்டது. அதனால் காட்டு அதிகாரியிடம் சென்று, தனக்கு உங்கள் மகளைக் கல்யாணம் செய்து வையுங்கள் என்று கேட்டது.

அதிகாரி சிங்கத்தைப் பார்த்து பயந்தார். அதனால்,என்ன செய்யலாம் என்று யோசித்தார். அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.

அவர் சிங்கத்தைப் பார்த்து, காட்டு ராஜா, காட்டு ராஜா என் மகள் ரொம்பப் பயந்தவள். உன்னுடைய பற்களையும் நகங்களையும் எடுத்துவிட்டால், அவள் பயப்படமாட்டால் அப்புறம், நான் அவளை உனக்குக் கல்யாணம் செய்து தருகிறேன்! என்று சொன்னார்.

அந்தப் பெண்மீது கொண்ட பிரியத்தால் சிங்கம் அதற்குச் சம்மதித்தது. காட்டு அதிகாரி, முதலில் அதன் பற்களைப் பிடுங்கினார். அதன்பின், நகங்களை வெட்டினார்.

பற்களையும் நகங்களையும் இழந்த சிங்கம், பலம் எல்லாவற்றையும் இழந்து ஆட்டுக் குட்டிபோல் இருந்தது! உடனே காட்டு அதிகாரி ஒரு தடியை எடுத்து, சிங்கத்தை பலமாக அடித்து விரட்டினார். நடக்காத ஒரு விஷயத்திற்கு ஆசைப்பட்டால் நஷ்டம் நமக்குத்தான் என்று புரிந்துகொண்டு, தப்பித்தோம், பிழைத்தோம் என்று சிங்கம் ஓடியே போய்விட்டது!

நீதி :
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

T.தென்னரசு,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.
TN டிஜிட்டல் டீம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

*செய்திச் சுருக்கம்*

🔮கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

🔮விண்வெளி ஆராய்ச்சியில், 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம்' என, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான, 'நாசா' கூறியுள்ளது.

🔮விக்ரம் லேண்டர் உடையவில்லை, சாய்ந்த நிலையில் உள்ளது - இஸ்ரோ தகவல்.

🔮அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரபேல் நடால் சாம்பியன்.

🔮இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 4-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி.

🔮UN human rights chief asks India, Pakistan to respect and protect rights of Kashmiris.

🔮ISRO, not losing hope, continues to make all-out efforts to restore link with lander ‘Vikram’.

🔮Indian journalist Ravish Kumar receives 2019 Ramon Magsaysay Award.

🔮 Rashid leads Afghanistan to famous test win over Bangladesh.

🔮 Mettur: 65,700 cusecs of water being released from Stanley reservoir.

🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪


Join Telegram Group Link -Click Here