🕴🕴🕴🕴🕴🕴🕴🕴👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻



*இன்றைய திருக்குறள்*

*குறள் எண்- 823*

பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
 ஆகுதல் மாணார்க் கரிது.

மு.வ உரை:

பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், (உள்ளன்பினால்) மாட்சியடையாதவர்க்கு இல்லை.

கருணாநிதி  உரை:

அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், பகையுணர்வு படைத்தோர் மனம் திருந்தி நடப்பதென்பது அரிதான காரியமாகும்.

சாலமன் பாப்பையா உரை:

மனத்தால் பொருந்தாதவர்கள் நல்ல பல நூல்களைக் கற்றபோதும் மனந்திருந்தி நல்ல நண்பர் ஆவது அரிது.

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*

நமது நேர்மையான உழைப்பு தான் நமக்கு வழிகாட்டும் அறிவு விளக்கு.நாம் கடினமாக உழைத்தால் நாம் அனைவரும்  வளமடையலாம்.

  - அப்துல் கலாம்

♻♻♻♻♻♻♻♻

*Important  Words*

 Lady's Finger வெண்டைக்காய்

 Lemon எலுமிச்சை

 Lentils பயறு

 Lilly அல்லி

 Lotus தாமரை

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*பழமொழி மற்றும் விளக்கம்*

*ஆலும் வேலும் பல்லுக்குறுதி. நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி.*

விளக்கம் :

ஆல் என்பது ஆலமரம். வேல் என்பது வேப்பமரம். ஆல மரத்தின் குச்சியும்இ வேப்ப மரத்தின் குச்சியும் கொண்டு பல் துலக்கும்போது இவை பற்களுக்கு நல்ல வலுவைத் தரும். சிறந்த மருத்துவப் பண்புகளையும் கொண்டவை. ஆகையால் இவை கொண்டு பல் துலக்க பல்வளம் சிறக்கும். இப்போது இரண்டாவது அடியான நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி என்பதில் இரண்டு விதமான கருத்துகள் நிலவுகின்றன. நாலு என்பது நல்லது கெட்டது நாலும் என்றும் இரண்டு என்பது உண்மையான விஷயங்களை பேசுதல் நன்மையான விஷயங்களை பேசுதல் என்பதைக் குறிக்கும் என்பது ஒரு கருத்து. மற்றொரு கருத்து நாலு என்பது நாலடியாரையும் இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கின்றது.

✍✍✍✍✍✍✍✍

*பொது அறிவு*

1) "நா" என்னும் ஒரெழுத்து ஒரு மொழியின் பொருளைக் கூறுக.

*நாக்கு*

2) கிரகங்களின் சுழற்சியைக் கண்டறிந்தவர்?

*கெப்ளர்*

📫📫📫📫📫📫📫📫

*விடுகதை*

1.காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அவர் யார்?

*சூரியன்*

2. பிறக்கும் போது வால் உண்டு. ஆனால் இறக்கும் போது வால் இல்லை. அது என்ன?

*தவளை*

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

*குகையில் தங்கம்*

ஒரு காட்டில் ஒரு சாமியார் மூச்சுத்திணற ஓடிக் கொண்டிருந்தார். அவரை யாரும் துரத்தவில்லை. அவர் ஓடுவதை அருகிலிருந்த மூன்று திருடர்களுக்கு வியப்பை உண்டு பண்ணியது. அவர்கள் சாமியாரைப் பிடித்து வந்து மூச்சுத்திணற ஓடியதன் காரணத்தைக் கேட்டனர். அதற்கு பயத்திலே நடுங்கி நின்ற சாமியார் தன்னைச் சாவு துரத்துவதாகக் கூறினார். திருடர்கள் சாமியாரைப் பைத்தியம் என்று எண்ணினர். அந்த சாவைக் காட்டுமாறு சாமியாரிடம் கூறினர்.

சாமியார் அவர்களை அழைத்துச் சென்று ஒரு குகையைக் காண்பித்தார். அந்த குகையில் கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் குகை நிறையத் தங்கம் இருந்தது. தங்கத்தைப் பகிர்ந்து கொள்ள திருடர்கள் எண்ணினர். ஆனால் அவர்களை பசி வாட்டியது. அவர்கள் தம்மில் ஒருவனை உணவு வாங்கி வர அருகில் உள்ள ஒரு நகருக்கு அனுப்பினர்.

அவன் உணவுடன் திரும்பியதும் இரு திருடர்களும் அவனைக் கொலை செய்தனர். ஏனெனில் தங்கம் முழுவதையும் தாங்களே கவர எண்ணினர். உணவு வாங்கி வந்த திருடனோ உணவில் நஞ்சு கலந்திருந்தான். அவனும் மற்ற இருவரைப் போலவே தங்கம் முழுவதையும் தானே அபகரிக்க விரும்பினான். நஞ்சூட்டப்பட்ட உணவு உண்ட திருடர்களும் மாண்டனர். தங்கம் பிழைத்தது. சாமியாரின் வாக்குப்பலித்தது.

நீதி :
பேராசை பெரு நஷ்டம்

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
T.தென்னரசு,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.
TN டிஜிட்டல் டீம்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

*செய்திச் சுருக்கம்*

🔮விக்ரம் லேண்டர் தொடர்பு இழந்தது எப்படி என ஆய்வு நடைபெற்று வருவதாக இஸ்ரோ தகவல்.

🔮466 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சிறுகோள்கள் மோதலால் தூசி மண்டல மேகம் உருவாகி பூமியில் உயிர்களின் வாழ்க்கையை வடிவமைத்து உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

🔮தமிழகத்தில் மோட்டார் வாகன சட்டம்: அபராத தொகை குறைத்து விரைவில் அரசாணை - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

🔮இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ். பதாரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

🔮இந்தியாமத்திய சுகாதாரத்துறை திட்டத்தின் கீழ் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கு வருபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க உத்தரவு!

🔮உலக குத்துச்சண்டை போட்டி: அமித் பன்ஹால், மனிஷ் கவுசிக் அரைஇறுதிக்கு முன்னேற்றம் - 2 பதக்கம் உறுதியானது.

🔮We must make a new Kashmir, says Modi.

🔮Air Marshal RKS Bhadauria is new IAF Chief.

🔮LCA flies high with Rajnath’s ‘thrilling’ sortie.

🔮Tamilnadu: Seminar on the project has been conducted in 14 colleges so far and students deposited 30,000 terms

🔮Boxers Amit Panghal, Manish Kaushik seal places in Olympic qualifiers with world medals.

🔮Virat Kohli surpasses Rohit Sharma as all-time leading run-scorer in T20s.

🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪



Join Telegram Group Link -Click Here