குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான உத்தேச விடைகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ளது. இந்த விடைகளில் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் அது குறித்து உரிய ஆதாரங்களுடன் தெரிவிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், நில அளவர் உள்ளிட்ட குரூப் 4 பிரிவுக்குள் வரக்கூடிய பணியிடங்களில் 6 ஆயிரத்து 491 இடங்கள் காலியாக இருந்தன. இந்தக் காலியிடங்களைஐ நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கையை அரசுப் பணியாளர் தேர்ஐவாணையம் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து தேர்வு எழுத 16 லட்சத்து 31 ஆயிரத்து 647 பேர் விண்ணப்பம் செய்தனர்

அவர்களில் 16 லட்சத்து 29 ஆயிரத்து 864 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். எழுத்துத் தேர்வு கடந்த 1-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 13 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினர்.

உத்தேச விடைகள்: எழுத்துத் தேர்வு முடிவடைந்து 10 நாள்கள் நிறைவடைந்த நிலையில், தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான உத்தேச விடைகளை டி.என்.பி.எஸ்.சி. தனது இணையதளத்தில்(www.tnpsc.gov.in ) பதிவேற்றம் செய்துள்ளது.

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தேர்வின்போது வெவ்வேறு விதமான குறியீட்டைக் கொண்ட வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. தேர்வர்களுக்கு எந்த வகையான குறியீட்டைக் கொண்ட வினாத்தாள் அளிக்கப்பட்டாலும் இப்போது தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாதிரி வினாத்தாள் தொகுப்பில் உள்ள கேள்விகளின் வரிசை எண் படியே தேர்வர்கள் தங்களது மறுப்பைத் தெரிவிக்க வேண்டும்.

வினாத்தாள் தொகுப்புகள் பொதுத் தமிழ், பொது ஆங்கிலம், பொது அறிவு என மூன்றாகப் பிரித்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பொது அறிவுப் பிரிவில் 171, 173, 174 ஆகிய மூன்று வினாக்களைத் தவிர்த்து இதர வினாக்களுக்கான விடைகளுக்கு தேர்வர்கள் தங்களது மறுப்பைத் தெரிவிக்கலாம்.

பொது அறிவுத் தாளில் உள்ள மூன்று வினாக்களை வல்லுநர் குழுவுக்குப் பரிந்துரை செய்ய தேர்வாணையம் ஏற்கெனவே முடிவு செய்துள்ளது. ஆனாலும், தேர்வர்கள் மூன்று வினாக்களுக்கும் அவர்களது கருத்துகளை தகுந்த ஆதாரத்துடன் தெரிவிக்கலாம்.

ஆதாரத்துடன் பெறப்படும் மறுப்புகள், கருத்துகள் ஆகியன வல்லுநர் குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட்டு விடைகள் இறுதி செய்யப்படும். உத்தேச விடைகளுக்கான மறுப்புகள், கருத்துகளை ஏழு நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும். அதாவது, வரும் 17-ஆம் தேதிக்குள் தேர்வாணையத்தின் இணையதளம் (www.tnpsc.gov.in ) வழியாகமட்டுமே தெரிவிக்க வேண்டும். அஞ்சல் வழியாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது. வரும் 17-ஆம் தேதிக்குப் பிறகு இணையதளம் வழியாகப் பெறப்படும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

மதிப்பெண்கள் எவ்வளவு? குரூப் 4 தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டன. அவற்றில், பொது அறிவுப் பிரிவில் 75 கேள்விகளும், திறனறிவுப் பிரிவில் 25 கேள்விகளும், பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் 100 கேள்விகளும் கேட்கப்பட்டன. 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்வில் தகுதி பெற குறைந்தபட்சமாக 90 மதிப்பெண்களை அனைத்து வகுப்பினரும் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று வினாக்கள் எவை
பொது அறிவுப் பிரிவில் மூன்று கேள்விகள் வல்லுநர் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்திய அரசியலமைப்பின் எந்த விதி அடிப்படை கடமைகள் குறித்து விளக்குகிறது என்ற கேள்விக்கு 14, 19, 32, 51 ஏ என நான்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கேள்வி மற்றும் விடை இறுதி முடிவுக்காக வல்லுநர் குழுவுக்கு அனுப்பப்பட உள்ளது என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.
இதேபோன்று, தகவல் அறியும் உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாள் என்ற கேள்விக்கு, 20 அக்டோபர் 2005, 21 அக்டோபர் 2005, 25 அக்டோபர் 2005, 12 அக்டோபர் 2005 ஆகிய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மற்றொரு கேள்வியான பொருத்துக பிரிவில், அரசியல் நிர்ணயச் சபை முதல் கூட்டம், வரைவுக் குழு உருவாக்கப்பட்ட தேதி, மாநிலங்களவையின் முதல் கூட்டத் தொடர், குடியரசு தினம் ஆகியன தெரிவிக்கப்பட்டு அவற்றுக்கு எதிரே முறையே 4 ஏப்ரல் 1957, 13 மே 1952, 29 ஆகஸ்ட் 1947, 9 டிசம்பர் 1946 ஆகியன கொடுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு கேள்விகளும் வல்லுநர் குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட உள்ளன என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளதுJoin Telegram Group Link -Click Here