அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் இனி தனியார் மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் போல பிரின்ஸிபால்என்றே அழைக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் தற்போது கல்லூரி முதல்வர்கள் பிரின்ஸிபால்என்று அழைக்கப்படுகின்றனர்.

அதேபோல் தனியார் மெட்ரிக், சிபிஎஸ்இ போன்ற ஆங்கிலவழி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் பிரின்ஸிபால் என்றுதான் அழைக்கப்படுகின்றனர்.  இந்தநிலையில் தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் புதிய மாற்றமாக, அரசு மேல்நிலைப்பள்ளிகளுடன் அதன் அருகில் உள்ள 15 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் நிர்வாகங்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஹெட்மாஸ்டர் என அழைக்கப்பட மாட்டார்கள் என்றும், பள்ளி முதல்வர், பிரின்ஸிபால்எனஅழைக்கப்படுவார்கள் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும் ஆசிரியர்களுக்கான பணி,  அவர்களுக்கு விடுமுறை அளிப்பது, தேர்வு நடத்துவது, பள்ளிகளின் விடுமுறை, மாணவர் சேர்க்கை ஆகியவற்றில் அவரே இறுதி முடிவு எடுப்பார். இதில் மேல்நிலைப்பள்ளியின் அருகில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும் மேல்நிலைப்பள்ளி முதல்வரின் அதிகாரத்துக்கு உட்பட்டவை என்றும் அரசு கூறியுள்ளது. தொடக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இனி ஆசிரியர்களாகவே  கருதப்படுவர். அவர்களின் மொத்த அதிகாரமும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.