அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்திலத்தில் அரசு பள்ளியில் படிக்கும் 11-ம்வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்திற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.பஞ்சாப் மாநிலத்தில் காங். முதல்வராக அமிரீந்தர் சிங் உள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் இளைஞர்களுக்கு மொபைல் வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும் என காங். தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது.இந்நிலையில் பஞ்சாப் அமைச்சரவை கூட்டம் முதல்வர் அமிரீந்தர் சிங் தலைமையில் நடந்தது. இதில் நடப்பு நிதியாண்டில் அரசு பள்ளிகளில் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதன்படி வரும் டிசம்பரில் முதற்கட்டமாக, இத்திட்டம் அமல்படுத்தப்படும். இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளதாக பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.Join Telegram Group Link -Click Here