அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடஒதுக்கீடு என்பது கொள்கை முடிவு என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை உள்ளது என்றும், தமிழகத்தை பொருத்தவரை 3 ஆண்டுகள் விதி விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இந்த3 ஆண்டுகளுக்கு தற்போதைய நடைமுறையே தொடரும் என தெரிவித்த அவர், அதற்குள் கற்றல் திறனை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது என கூறினார்.

இடஒதுக்கீடு வழங்க கொள்கை முடிவு தான் எடுக்க வேண்டும் என தெரிவித்த அவர்,அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடஒதுக்கீடு என்பது கொள்கை முடிவுதான் என குறிப்பிட்டார்.



Join Telegram Group Link -Click Here