நெட் தேர்வுக்கான அறிவிப்பை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது. இதற்கு திங்கள்கிழமை (செப்டம்பர் 9) முதல் விண்ணப்பிக்கலாம்.
கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் தேசிய அளவிலான தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்.
இந்தத் தேர்வை என்.டி.ஏ. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதம் என இரண்டு முறை நடத்துகிறது.
இப்போது டிசம்பர் மாதத்துக்கான நெட் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
தேர்வு எப்போது?: இந்தத் தேர்வானது டிசம்பர் 2 முதல் 6-ஆம் தேதி வரையிலான தேதிகளில் ஏதாவது ஒரு நாளில் நடத்தப்பட உள்ளது. தேர்வு தேதி இறுதி செய்யப்பட்டு பின்னர் வெளியிடப்படும்.
ஆன்-லைன் முறையிலேயே இந்தத் தேர்வு நடத்தப்படும். தேர்வில் இரண்டு தாள்கள் இடம்பெற்றிருக்கும். இரண்டு தாள்களிலும் கொள்குறி தேர்வு முறை கேள்விகள் மட்டுமே கேட்கப்படும். முதல் தாளில் 100 மதிப்பெண்களுக்கு 50 கேள்விகளும், இரண்டாம் தாளில் 200 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகளும் இடம்பெற்றிருக்கும்.
விண்ணப்பிக்க அக்டோபர் 9 கடைசி: இந்தத் தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் திங்கள்கிழமை (செப்டம்பர் 9) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அக்டோபர் 9 கடைசி நாளாகும்.
தேர்வு முடிவுகள் டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
3 Comments
I am studying msc CHEM 1 year..
ReplyDeleteI will apply this exam..
Plz rply
You can apply in second year
ReplyDeleteAge limit
ReplyDeletePost a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..