காலைவழிபாட்டுச்  செயல்பாடுகள்
24-10-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றையதிருக்குறள்
குறள்எண்- 283

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து

 ஆவது போலக் கெடும்.

மு.வ உரை:

களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.

கருணாநிதி  உரை:

கொள்ளையடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்.

சாலமன் பாப்பையா உரை:


திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

மனதில் அமைதி நிலவ வேண்டும். மனதின் அமைதியினால்வீட்டில் அமைதி நிலவும். வீட்டில் அமைதி நிலவினால் நாட்டில் அமைதி நிலவும்.
 - அப்துல் கலாம்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம்

ஊசியைக் காந்தம் இழுக்கும்.  உத்தமனைச் சினேகம் இழுக்கும்.

விளக்கம் :


ஊசியை காந்தம் இழுப்பதுபோல உத்தமனின் அன்பைக் கண்டு அனைவரும் அவனிடம் நட்பு கொள்ள விரும்புவர் என்பது இந்த பழமொழி விளக்கும் கருத்து ஆகும்.

 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important  Words

1. Bucket - வாளி
2.Candle - மெழுகுவர்த்தி
3. Clock - கடிகாரம்
4. Basket - கூடை
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. நண்டுக்கு எத்தனை கால்கள்?

 பத்து

2. இந்தியாவை ஆண்ட கடைசி முகலாய மன்னர் யார்?

பகதூர் ஷா

📫📫📫📫📫📫📫📫
விடுகதை
1.பச்சைக் கதவு, வெள்ளை ஜன்னல்; உள்ளே கறுப்பு ராஜா. அது என்ன?
சீதாப்பழம்
2. தொங்குது கீழே கொம்பு; தொட்டால் வருமே வம்பு. அது என்ன?
யானைத் தந்தம்

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!

நெல்லிக்காய்

🍊 நெல்லிக்காய் உயரமான இலையுதிர் மரமாகும். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும்.


🍊 நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு.

🍊 அரு நெல்லிக்காய் நம் வீட்டுத் தோட்டத்தில் பயிரிடப்படும், மிகவும் சுவையுடனிருக்கும்

🍊 காட்டு நெல்லிக்காய் மருத்துவ குணம் மிக்கதாக சித்த மருத்துவத்தில் கருதப்படுகிறது.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

ஜோடிக் காக்கை

ஓர் ஊரில் பணக்காரன் ஒருவன் இருந்தான், அவன் ஒருநாள் தூங்கி எழுந்ததும் விடியற்காலையில் ஜோடியாக உள்ள காக்கைகளைக் கண்டால் அன்றைக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும் என்று கேள்விப்பட்டு அறிந்தான். தான் ஜோடிக் காக்கைகளைக் காலையில் எழுந்ததும் காண வேண்டும் என்ற எண்ணம் கொண்டான்.

அவ்வாறு எண்ணம் கொண்ட அப்பணக்காரன் தன் வேலைக்காரனை அழைத்து நீ விடியற்காலையில் ஜோடி காக்கைகளைப் பார்த்து வந்து என்னை எழுப்பு என்று கூறினான். அவ்வேலைக்காரன் மறுநாள் விடியற்காலையில் ஓர் இடத்தில் ஜோடிக் காக்கைகள் இருப்பதைப் பார்த்தான், உடனே ஓடிச் சென்று தன் எஜமானை எழுப்பினான்.


அப்பணக்காரன் படுக்கையிலிருந்து எழுந்து சென்று பார்க்கும் பொழுது அங்கே ஒரு காக்கை மட்டுமே இருந்தது. ஒரு காக்கையை மட்டும் பார்த்த பணக்காரன் கோபம் கொண்டு மற்றொரு காக்கை பறந்து செல்வதற்கு முன்னால் என்னை வந்து ஏன் எழுப்பவில்லை என்று சொல்லிக் கொண்டே வேலைக்காரனை அடித்தான். அப்போது அந்த வேலைக்காரன் எஜமானனே விடியற்காலையில் ஜோடிக் காக்கைகளைப் பார்த்தால் எனக்கு உண்டான அதிர்ஷ்டத்தைப் பார்த்தீர்களா? உங்களிடம் அடி வாங்கியதுதான் அதிர்ஷ்டம் என்று கூறினான். அதைக் கேட்ட பணக்காரன் ஆமாம் என்று சொல்லி அடிப்பதை நிறுத்திவிட்டான்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 54-வது இடத்தில் இருந்து 10-வது இடத்திற்கு முன்னேறினார் ரோகித் சர்மா.

🔮தமிழகத்தில் 6 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

🔮தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும் - சென்னை போக்குவரத்து கழகம் அறிவிப்பு.

🔮பிஎஸ்என்எல் - எம்டிஎன்எல் நிறுவனங்களை இணைக்கவும், 4ஜி சேவை வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்.


🔮காவல்துறை பல சோதனைகளையும், சவால்களையும் சந்தித்துள்ளது: 596 போலீசாருக்கு விருது வழங்கி முதல்வர் பழனிசாமி பேச்சு.

🔮விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை: செப். 17-ம் தேதி ஆர்பிட்டர் அனுப்பிய புகைப்படங்களை ஆய்வு செய்த பின் நாசா தகவல்.

HEADLINES

🔮MTNL will act as a subsidiary of BSNL, says Telecom Minister Ravi Shankar Prasad announcing the Cabinet decisions.

🔮Delhi on alert following intel about JuD, Lashkar attack on RAW, Army offices.

🔮Army rushed, red alert issued as condition in Karnataka's flood-hit Raichur turns grim.

🔮Chennai Metro Water supply increased to 650 MLD from Wednesday.


🔮Will support Virat Kohli in every possible way': Sourav Ganguly.Join Telegram Group Link -Click Here