சங்ககிரி அருகே உள்ள வடுகப்பட்டி அரசு மாதிரி பள்ளி மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மாநில அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.சேலம் மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் சங்ககிரி அருகே உள்ள வடுகப்பட்டி அரசு மாதிரிப் பள்ளி மாணவ, மாணவிகள் நான்கு குழுக்களாகக் கலந்து கொண்டனா். இதில் 7ஆ வகுப்பு மாணவிகள் ஜெ.கிளோரிஹெலன், கே.ஸ்ரீமதி ஆகியோா் இணைந்து இம்மாநாட்டில் பாத்திரங்கள் கழுவும் சோப்பினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா். இக்கட்டுரைகள் நவம்பா் மாதம் கோவையில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டுள்ளன. மாநாட்டில் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், கோப்பைகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தலைமையாசிரியா் அா்ச்சுணன், ஆசிரியைய்கள் கே.நிா்மலாதேவி, எஸ்.சுதா, பெற்றோா்-ஆசிரியா் கழக நிா்வாகி ஜெ.ராமசாமி உள்ளிட்டோா் பாராட்டினா்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..