காலைவழிபாட்டுச் செயல்பாடுகள்
05-11-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றையதிருக்குறள்
பொன் முட்டையிடும் வாத்து
குறள்:
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.
விளக்கம் :
ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும். எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.
கதை :
கந்தசாமி என்ற ஒரு ஏழை தன் மனைவியுடன் சிறு குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தான். வயதாகி விட்டதால் வேலைக்கும் செல்ல முடியாது. தங்களிடம் இருந்த பொருட்களை விற்று சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டது. நாட்கள் செல்லச்செல்ல அவர்கள் உண்ண உணவின்றி தவித்தனர்.
இந்நிலையில் அவன் ஆண்டவனை நோக்கி இறைவா எங்களை ஏன் இப்படி படைத்தாய்? இது இப்படியே நீடித்தால் வறுமை தாங்காது, நாங்கள் இறப்பதை தவிர வேறு வழியில்லை என வேண்டினான்.
அவன் மீது இரக்கம் கொண்ட இறைவன் அவன் முன் தோன்றி அவனின் குறைகளைத்தீர்க்க அவனுக்கு வாத்து ஒன்றை பரிசளித்தார். அந்த வாத்து தினம் ஒரு பொன் முட்டை இடும் என்றும் அதை விற்று அன்றாடம் குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்கி வாழ்நாளை மகிழ்ச்சியாக கழிக்கலாம் என்றும் கூறி மறைந்தார். வாத்து தினம் ஒவ்வொரு பொன் முட்டையிட அவர்கள் அதனை விற்று வாழ்கையை இனிதாகக் கழிந்தனர்.
ஒரு நாள் கந்தசாமியின் மனைவி தன் கணவனிடம் சென்று தினம் இந்த வாத்து ஒவ்வொரு பொன் முட்டையே இடுகின்றது, இப்படியே இருந்தால் நாம் எப்படிப் பெரிய பணக்காரர் ஆவது என்று சொல்லி, இந்த வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் நாம் எடுத்தால் அதை விற்று பெரிய பணக்காரர் ஆகிவிடலாம் என்று ஒரு உபாயம் சொன்னாள். இதைக் கேட்ட கந்தசாமிக்கும் அது சரியெனத் தோன்றியது.
உடனே, கந்தசாமி அந்த வாத்தைப் பிடித்து வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் எடுக்க வாத்தை கொன்று அதன் வயிற்றைக் கிழித்தான். என்ன ஆச்சரியம் அந்த வாத்தின் வயிற்றில் ஒரு முட்டை இருந்தது. அதன் வயிற்றில் மற்ற வாத்துகள்போல் வெறும் குடலே இருந்ததை கண்டு ஏங்கினர். தினம் ஒரு பொன் முட்டையிட்ட வாத்து இறந்து விட்டதால், வறுமை அவர்களை மீண்டும் சூழ்ந்துகொண்டது.
தங்கள் பேராசையே பெரும் தரித்திரத்தை தந்தது என மனம் வருந்தி ஏழ்மையாகவே வாழ்ந்து உண்ண உணவின்றி இறந்தனர்.
நீதி :
அதிக ஆசை ஆபத்தானது
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
யாரும் சென்றிடாத கடினமான பாதையில் சென்று வெற்றி பெறக்கூடிய தைரியம் ஒவ்வொருவரது உள்ளத்திலும் உருவாக வேண்டும்.
- அப்துல் கலாம்
✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம்
ஊருக்கு பொது ஏரிக்கு மது
விளக்கம் :
ஏரியின் மதுவில்தான் அதிக பயன்பாடு இருக்கும். மீன்கள் அதிகம் கிடைக்கக் கூடிய இடமும் அதுதான். அது ஊருக்குப் பொதுவானது. அதுபோல யாராவது மிகவும் ஏமாளியாக ஊர் மக்கள் அனைவரிடமும் ஏமாறுபவராக இருந்தால் அவரை எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம். தனக்கேற்றவாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால் அவரை இந்த பழமொழி வைத்துக் குறிப்பிடுகிறது.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
1. Arithmetic - எண்கணிதம்
2.Algebra - இயற்கணிதம்
3.Dictionary - அகராதி
4. Essay - கட்டுரை
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு
1. சீன விளையாட்டின் தேசிய விளையாட்டு எது?
பிங்பாங்
2. ராஜீவ் காந்தி எத்தனை வயதில் பிரதமர் ஆனார்?
42 வயதில்
📫📫📫📫📫📫📫📫
விடுகதை
1. காட்டு ஓரம் போகிற கடாவை கிள்ளிப் பிடிக்க முடி இல்லை. அது என்ன?
ஆமை
2.மண்ணுக்குள்ளே இருக்கும் மாயாண்டி, உரிக்க உரிக்க தோலாண்டி
வெங்காயம்
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!
காலிஃபிளவர்
🌸 இது குருசிஃபேரஸ் என்ற காய்கறி குடும்பத்தைச் சேர்ந்தது.
🌸 காலிஃபிளவர் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே துருக்கி நாட்டு மக்களால் உணவாக உட்கொள்ளப்பட்டது. இந்தியாவில் 17-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் தான் ஒரு விவசாய பயிராக பரவியது.
🌸தமிழ்நாட்டில் சமவெளியில், குளிர் காலங்களில் பயிர் செய்யலாம்.
🌸அமெரிக்கர்கள் அதிகமாக உட்கொள்ளப்படும் காலிஃபிளவர் விவசாயத்தில் இன்று முதலிடம் வகிப்பது இத்தாலி .
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச்சுருக்கம்.
🔮மஹா புயல்’ குஜராத், மகாராஷ்டிராவில் நாளை கனமழை- இந்திய வானிலை ஆய்வு மையம்.
🔮பிராந்திய பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாது எனத்தகவல்.
🔮20 ஓவர் உலகக்கோப்பை 2020 அட்டவணை : ஒவ்வொரு போட்டியும் எப்போது, எங்கு நடைபெறும் முழு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
🔮அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி -சென்னை வானிலை மையம்.
🔮டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி ‘சாம்பியன்’.
🔮தாஜ்மஹாலை மாசுபடுத்தியதற்காக நெடுஞ்சாலை ஆணையத்துக்கு ரூ.6.84 கோடி அபராதம்: மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி.
🔮வடகிழக்கு பருவமழையை சமாளிக்க 689 அலுவலர்கள் அடங்கிய 151 குழுக்கள்: அமைச்சர் காமராஜ் தகவல்.
HEADLINES
🔮India had made a strong case for an outcome which is favourable to all countries and all sectors.
🔮To save Delhi from air pollution, Supreme Court talks tough to Punjab, Haryana and Uttar Pradesh.
🔮Iran announces new violations of nuclear deal on anniversary.
🔮Skyrocketing onion and tomato prices may not descend any time soon.
🔮Kidambi Srikanth pulls out; PV Sindhu, Saina Nehwal eye title at China Open.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..