காலைவழிபாட்டுச்  செயல்பாடுகள்
07-11-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றையதிருக்குறள்

பாம்பின் பரிதாப நிலை

குறள் :
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.

விளக்கம் :
வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்.

கதை :
ஒரு காட்டில் நல்ல பாம்பு ஒன்று வாழ்ந்து வந்தது. சற்று வயதான பாம்பு அது. ஒரு நாள் அது இரை தேடிக்கொண்டே காட்டுக்குள் அலைந்து திரிந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு மரத்தடியில் முனிவர் ஒருவர் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் சென்று பணிந்து நின்றது பாம்பு. கண்களைத் திறந்து பார்த்தார். உனக்கு என்ன வேண்டும்? சுவாமி, நான் போன பிறவியில் பாவம் செய்து இந்தப் பிறவியில் பாம்பாகப் பிறந்துள்ளேன். அதனால் மீண்டும் பிறவாதிருக்க நான் என்ன செய்யவேண்டும் தயவு செய்து எனக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்று கேட்டது.

முனிவர், நீ இந்தப் பிறவியில் யாரையும் கடித்துத் துன்புறுத்தாமல் இருந்தால், உனக்கு அடுத்த பிறவியில் உயர்ந்த பிறவி கிட்டும் என்று உபதேசித்து ஆசி கூறினார். அதைக் கேட்டு மகிழ்ந்த பாம்பு அவரை வணங்கி சென்றது. காட்டில் திரிந்த பாம்பு ஊருக்குள் வந்தது. நாம் யாரையும் கடிப்பதில்லை யாருக்கும் தீங்கு செய்வதில்லை என முனிவரிடம் கூறிவிட்டோமே. நமக்கும் யாரும் தொந்தரவு தரமாட்டார்கள் என எண்ணிக் கொண்டது.

அதனால் அந்தப் பாம்பு ஊரில் உள்ள ஒரு மைதானத்தில் உலவியபடி இரை தேடியது. அப்போது அங்கு விளையாட வந்த சில சிறுவர்கள் அங்கு உலவும் பாம்பைப் பார்த்து அலறினார்கள். அந்த பாம்பு யாரையும் தொந்தரவு செய்யாமல் தன் வழியே போய்க் கொண்டு இருந்தது. ஆனால் சிறுவர்கள் விடுவார்களா? பாம்பின் அருகே இருந்த கற்களை எடுத்து வீசத் தொடங்கினர். அப்போது பாம்பு தன் தலையைத் தூக்காது மெல்ல ஊர்ந்து கிடைத்த பொந்தில் நுழைந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டது. பாம்பு இரவானதும் அந்த இடத்தை விட்டு விட்டு காட்டை நோக்கி சென்றது. அதனால் ஊர்ந்து செல்ல முடியாதபடி உடல் முழுவதும் காயத்துடன சென்று முனிவர் முன் நின்றது.

அதிகாலையில் ரத்தம் சொட்டும் உடம்புடன் வந்து நின்ற பாம்பைப் பார்த்து திடுக்கிட்ட முனிவர், என்னவாயிற்று? ஏன் இப்படி காயப்பட்டு வந்திருக்கிறாய்? என்று அன்போடு வினவினார். சுவாமி, நீங்கள் சொன்னபடியே யாரையும் கடிப்பதில்லை என முடிவு செய்து விட்டோமே என்று ஊருக்கு வெளியே இருந்த மைதானத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு யாரையும் தொந்தரவு செய்யாமல் என் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அங்கு விளையாட வந்த சிறுவர்கள் என்னைப் பார்த்ததும் என்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள் என்று கூறிக் கண்ணீர் விட்டது.

உன்னைக் கடிக்காதே என்று தானே சொன்னேன். நீ உன் பிறவி குணத்தைக் காட்டவேண்டியது தானே? பாம்புக்குப் புரியவில்லை. அது என்ன சுவாமி சொல்கிறீர்கள்? என்று கேட்டது. ஆமாம் உன் பாம்பு குணமான சீறும் குணத்தைக் காட்டியிருந்தால் ஓடியிருப்பார்கள் நீயும் அடிபடாமல் தப்பியிருக்கலாமே என்றுதான் சொன்னேன்.

உண்மைதான் சுவாமி நீங்கள் கடித்துத் துன்புறுத்தாதே என்றுதான் கூறினீர்கள், சீறிப் பயமுறுத்தாதே என்று சொல்லவில்லையே, அந்தப் பதிலை ஏற்றுக் கொண்ட முனிவர் பாம்புக்கு விடை கொடுத்து அனுப்பினார்.

சில நாட்கள் கழித்து அந்தப் பாம்பு காட்டின் எல்லையில் ஒரு பாறை அருகே படுத்திருந்தது. அப்போது சில மாடு மேய்க்கும் சிறுவர்கள் அங்கு வந்தனர். பாம்பு படுத்திருப்பதைப் பார்த்தனர். ஒவெனக் கூவியவாறு ஓடினர். மீண்டும் அருகே வந்தபோது பாம்பு புஸ் என சீறவே தங்களின் மாடுகளை விரட்டிக் கொண்டு அவ்விடம் விட்டு விலகினர். பாம்பு நலமுடன் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தது. அடுத்த பிறவி நல்ல பிறவியாக அமைய வேண்டுமாயின் இப்பிறவியில் யாருக்கும் தீங்கு செய்யாமல் இருக்கவேண்டும் என்ற கொள்கையைக் கடைபிடித்தது அந்தப் பாம்பு. அதே போல் தனக்கு தீமை ஏற்படுமாயின் தன் குணத்தைக் காட்டித் தப்பிப்பதும் தவறு அல்ல என்பதைப் புரிந்து கொண்டது அந்தப் பாம்பு.

நீதி :
தன்னிடம் உள்ள வலிமை வைத்து மற்றவர்களை துன்புறுத்தக் கூடாது.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே. அது உன்னை கொன்று விடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம்.
 - அப்துல் கலாம்

✡✡✡✡✡✡✡✡
பழமொழிமற்றும்விளக்கம்

படுத்தாலும் புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும் .

விளக்கம் :


நாம் என்னதான் உழைத்தாலும் சொத்து சேர்த்து வைத்தாலும் சொத்தைக் காப்பாற்ற முயற்சி எடுத்தாலும் நமக்கென்று நம் தலையில் என்ன எழுதியிருக்கிறதோ அதுதான் கடைசிவரை நிலைக்கும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1.Lentil - பருப்பு
2.Mustard - கடுகு
3. Saffron - குங்குமப்பூ

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1.உலகின் சர்க்கரை கிண்ணம் எது?

 கியூபா

2.கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை எத்தனை அடி உயரம் கொண்டது?

133 அடி

📫📫📫📫📫📫📫📫
விடுகதை

1. நிலத்திலே முளைக்காத புல், அது நிமிர்ந்து நிற்காத புல். அது என்ன?

தலைமுடி

2. கண் இல்லாத நான் , பார்வை இழந்தவர்க்கு பாதை காட்டுவேன். நான் யார்?

கைத்தடி


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!

தென்னை மரம்

தேங்காய்

🍅 தென்னை நல்ல மழையும், சூரிய ஒளியும் கிடைக்கும் வெப்ப மண்டல நிலப்பரப்புகளில் வளரும் மரமாகும்.

🍅 தென்னை உலகில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் வளர்க்கப்படுகிறது.

🍅 பிலிப்பைன்சு நாடு தேங்காய் உற்பத்தியில் உலக அளவில் முதலிடம் வகிக்கிறது.

🍅 தென்னை மரம் 30 மீட்டர் வரை வளரக் கூடியது. இதற்கு கிளைகள் கிடையாது. இதன் உச்சியில் இருக்கும் தென்னோலை 4-6 மீட்டர் நீளமுடையது.

🍅 தேங்காய் என்பது தென்னைமரத்தின் பழம் ஆகும்.

🍅 தேங்காய் தென்னிந்திய சமையலிலும், சுபநிகழ்ச்சிகளிலும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:

T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮மதுரை அழகர் மலை தமிழக வனத்துறைக்கு சொந்தமானது தான்" -உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

🔮சூரிய குடும்பத்தைக் கடந்து ‘இண்டர்ஸ்டெல்லார்’ பகுதிக்கு சென்றது வாயேஜர் 2 விண்கலம்.

🔮சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி: சாய்னா வெளியேற்றம்; பருபள்ளி காஷ்யப் முன்னேற்றம்.

🔮டெல்லியை தொடர்ந்து சென்னையிலும் காற்று மாசு அதிகரிப்பு: மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்..அச்சத்தில் சென்னைவாசிகள்.

🔮தமிழகம் ,பொன்னேரி பெரியமாங்கோடு கிராமத்தில் ரூ.4.50 கோடியில் மீன்பிடி இறங்குதளம்.


🔮சென்னையில் பள்ளி குழந்தைகளை அதிக அளவு ஆட்டோவில் ஏற்றினால் உரிமம் ரத்து: போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை.

HEADLINES

🔮Delhi air pollution: Supreme Court orders ₹100 per quintal support to small, marginal farmers who don't burn stubble.

🔮Cyclonic storm ‘Maha’ may fizzle out, not hit Gujarat coast on November 7: IMD.

🔮Kolkata gets set for country’s first-ever day-night pink ball Test at Eden Gardens.

🔮BSNL rolls out VRS scheme; nearly one lakh employees eligible.


🔮India asks Pakistan to clarify on passport requirement for Kartarpur visit.