புதுடில்லி: செயல்படாது... பாரத ஸ்டேட் வங்கியால் வழங்கப்பட்ட மேக்னடிக் ஸ்டிரிப் கொண்ட ஏடிஎம் அட்டைகள், கிரெடிட் அட்டைகள் ஜனவரி 1ம் தேதி முதல் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து டுவிட்டரில் அந்த வங்கி சார்பில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், மேக்னடிக் ஸ்டிரிப் கொண்ட ஏடிஎம் அட்டைகளும், கிரெடிட் அட்டைகளும் வரும் 30ம் தேதியுடன் முடக்கப்படும். ஜனவரி 1ம் தேதி முதல் அவை செயல்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே அந்த அட்டைகளை வைத்திருப்போர், தாங்கள் கணக்கு பராமரிக்கும் வங்கி கிளைக்கு சென்று இவிஎம் சிப் மற்றும் பின் அடிப்படையிலான அதிக பாதுகாப்பு அம்சங்களை கொண்ட அட்டைகளை விண்ணப்பித்து பெறும்படியும் கோரப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்த அட்டையை பெற்றவர்கள் எந்த கவலையும் பட வேண்டாம், ஜனவரி 1ம் தேதிக்கு பிறகும் அது செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது