திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கியது.முக்கிய நிகழ்வான மகாதீபம் இன்று ஏற்றப்பட்டது.அதன் படி அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு எல்லாம் பரணி தீபம் ஏற்றப்பட்டது.இந்நிலையில் திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

இதில் சுமார் 20 இலட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பக்தர்கள் வருகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் நாளை திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரி,அரசு அலுவலகங்களுக்கு மட்டும் விடுமுறையை அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்