சமுக வலைத்தளங்களில் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் வெளியாகியது.
வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சமுக வலைத்தளங்களில் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பாகவே பதிவேற்றம் செய்யப்பட்டது 10-ம் வகுப்பு அறிவியல் தேர்வின் வினாத்தாள் ஒரு நாள் முன்கூட்டியே வெளியாகியதாகவும், அதனை தொடர்ந்து 12-ம் வகுப்பு வேதியியல் தேர்வுக்கான வினாத்தாள் வெளியானதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 18-ம் தேதி நடைபெற்ற 11-ம் வகுப்பு வேதிதியல் தேர்வுக்கான வினாத்தாளும், முந்தைய நாளே வெளியானதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இந்நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.வரும் காலங்களில் இதுபோன்று நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

Join Telegram& Whats App Group Link -Click Here