முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ எப்போதும் அதிரடி தான், அதுவும் புத்தாண்டு வந்துவிட்டால் போதும் சொல்லவேண்டியது இல்லை. ஆம் நியூ இயர் ஆஃபர் எனப் பல கோடி வாடிக்கையாளர்களை இந்தியாவில் பெற்ற ரிலையன்ஸ் ஜியோ மீண்டும் ஹேப்பி 2020 நியூ இயர் ஆஃபரை அறிவித்துள்ளது.

அப்படி இந்தத் திட்டத்தில் என்ன இருக்குன்னு தானே கேட்குறீங்க.. வாங்க பார்ப்போம்.

நியூ இயர் ஆஃபர்
ஏற்கனவே இந்திய டெலிகாம் நிறுவனங்கள் மத்தியில் கடுமையான போட்டி இருந்து வரும் நிலையில் ஜியோவின் இப்புதிய திட்டத்தின் அறிவிப்பு பெரிய அளவிலான வெறுப்பைச் சக போட்டி நிறுவனங்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது என்றால் மிகையில்லை.

ஒவ்வொரு வருடமும் ஜியோ இப்படி ஏதாவது ஒரு திட்டத்தை மக்களைப் பெரும் அளவில் ஈர்த்து வருகிறது. இந்த வகையில் இந்த வரும் அறிவித்த திட்டம் தான் 2020 நியூ இயர் ஆஃபர்.

அன்லிமிடெட் ஆஃபர்

3 மாதம் முன் தீபாவளி பண்டிகையை முன்னணி அதிரடி ஆஃபரை அறிவித்த ஜியோ வெறும் 3 மாத இடைவெளியில் அடுத்த அதிரடி ஆஃபரை வெளியிட்டு மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

இப்புதிய 2020 ஹேப்பி நியூ இயர் ஆஃபர்-ல் எல்லமே அன்லிமிடெட் அட சத்தியமாங்க. எல்லாமே அன்லிமிடெட் தான்.

020

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ புத்தாண்டைச் சிறப்புச் சலுகையாக அறிவித்துள்ள 2020 ஹேப்பி நியூ இயர் ஆஃபரில் வாய்ஸ் கால், வீடியோ கால், எஸ்எம்எஸ், ஜியோ சேவைகள் என அனைத்துமே அன்லிமிடெட் தான். ஆனால் இண்டர்நெட் டேட்டா மட்டும் கட்டுப்பாடுகளுடன் தினமும் 1.5 ஜிபி மட்டும்.

இவை அனைத்தும் வெறும் 2, 020 ரூபாய்க்கு என்பதே கூடுதல் மகிழ்ச்சியான செய்தி.

இத்திட்டம் ஜியோ சில நாட்களுக்கு முன்பு அறிவித்த 98 ரூபாய் மற்றும் 149 ரூபாய் திட்டங்களைத் தீட்டியபோதே திட்டமிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஜியோ போன்

இதேபோல் புதிய ஜியோபோனை 12 மாத திட்டத்துடன் வெறும் 2020 ரூபாய் வாடிக்கையாளர்கள் பெறலாம் என அறிவித்துள்ளது. இந்த 12 மாத திட்டத்தில் தினமும் 0.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ், ஜியோ சேவைகள் ஆகிய அனைத்தும் கிடைக்கும்.

Join Telegram& Whats App Group Link -Click Here