கோயம்புத்தூர் மாவட்டத்தில் பயிலும் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஒருநாள் புத்துணர்வு மற்றும் வழிகாட்டல் பயிற்சி வகுப்பினை கே.பி.ஆர் கல்விக்குழுமமும், கோயம்புத்தூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையும் இணைந்து நடத்த உள்ளன..

இதில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற உள்ளனர். இது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற உள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.
இம்முகாமில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், முனைவர்.கவிதாசன், எழுத்தாளர் சிகரம் சதிஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாணவர்களோடு கலந்துரையாட உள்ளனர்..