மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு 2017 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் நடத்தப்பட்டுவருகிறது. அடுத்த கல்வியாண்டிற்கான நீட் தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கவுள்ளது என்றும் அதன் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் கடந்த டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி தொடங்கி நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவிருந்த நிலையில் இணையதள கோளாறு காரணமாக நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜனவரி 6-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனால் நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் www.ntaneet.nic.in, www.nta.ac.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பித்தல் கையேட்டை பதிவிறக்கம் செய்யலாம் மற்றும் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Join Telegram& Whats App Group Link -Click Here