அரசு தேர்வுத்துறை
வெளியிடும் 10ம் வகுப்பு மாதிரி வினாத்தாளில் குழப்பம் நீடிப்பதால், பொது தேர்வில் மதிப்பெண் குறையும் அச்சம் மாணவர்களிடம் நிலவுகிறது.நடப்பு கல்வி ஆண்டில் பொது தேர்வுக்கு புதிய பாடத்திட்டபடி மாதிரி வினாத்தாள் வெளியானது. பத்தாம் வகுப்பு காலாண்டு தேர்வுக்கு அதன்படியே சமூக அறிவியல் பாட மாதிரி வினாத்தாள் தயாரித்தனர். ஆனால் அரையாண்டு வினாத்தாள் எவ்வித முன்அறிவிப்பின்றி புதுவடிவில் மாற்றி அமைத்துள்ளனர். இதில் காலாண்டு தேர்வுக்கு கேட்ட 10 மதிப்பெண் பொருத்துக வினாவுக்கு பதில் விரிவான விடை வினா 2, சரியான விடைக்கு பதில் விரிவான விடை வினா 1 ம் இடம் பெற்றிருந்தது.2019 டிச.,23 தேர்வில் சிவகங்கை, நாமக்கல், திருநெல்வேலியில் காலாண்டு தேர்வில் பழைய வினாத்தாள் வடிவிலேயே வினாக்கள் இருந்தன.

ஜன.,9 ல் நடந்த சிறப்பு தேர்விலும் காலாண்டு தேர்வு வடிவமைப்பில் வினாக்கள் இருந்தன.புதிய மாதிரி வினாத்தாள்களை மாணவர்கள் பார்க்க வாய்ப்பின்றி போனதால், தேர்ச்சி விகிதம் குறைந்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு உயர், மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொது செயலாளர் சேதுசெல்வம் கூறியதாவது:வினாத்தாள் வடிவமைப்பில் அரசு தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அரசு பொது தேர்வில் மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் நலன் கருதி காலாண்டு வினாத்தாள் வடிவமைப்பிலேயே தேர்வு நடத்த வேண்டும். இது குறித்து அரசு தேர்வுத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம், என்றார்.


Join Telegram& Whats App Group Link -Click Here