தமிழகத்திலுள்ள 3090 உயர்நிலை மற்றும் 2939 மேல்நிலைப் பள்ளிகளில் ( 6029 ) Hi - Tech Lab Smart Classroomக்கு தேவையான தளவாடங்கள் தொடர்ந்துநிறுவப்பட்டு டிசம்பர் 2019க்குள் பணிகள் முடிவடையும் தருவாயில் இருக்கின்றது .
இந்நிலையில் , நிறுவப்பட்ட Hi - Tech Lab Smart Classroom வசதியினை அன்றாட வகுப்புகளோடு அனைத்து பாடத்திற்கும் பயன்படுத்துவதற்கு ஏதுவாக ஏற்கனவே திட்டமிட்டபடி முதற்கட்டமாக அனைத்து மாவட்டத்திலுள்ள மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதுநிலை ஆசிரியர்களுக்கு ( PG Teachers ) கடந்த 2019 டிசம்பர் 19 மற்றும் 20 தேதிகளில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த கல்வி இயக்ககம் மூலமாக 2 நாள் Hi - Tech Lab Smart Classroom கருத்தாளர்கள் ( KRP ) பயிற்சிகள் நடந்து முடிந்தது .
இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டத்திலுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ( BT Teachers ) இப்பயிற்சியினை கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது . எனவே வருகின்ற 2020 ஜனவரி 6 மற்றும் 7ஆம் தேதி என இரண்டு நாட்கள் நடைபெறவிருக்கும் மாநில அளவிலான உண்டு உறைவிட Hi - Tech Lab Smart Classroom கருத்தாளர் பயிற்சிக்கு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களை ( BT teachers ) பணிவிடுப்பு செய்து அனுப்புமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் .
மேலும் , இந்த இரண்டு நாள் பயிற்சியானது இரண்டு வெவ்வேறு இடங்களில் ஒரே நாட்களில் நடைபெறுவதால் , கருத்தாளர் பயிற்சிக்கு பங்கேற்கும் ஆசிரியர்களை மாவட்டம் வாரியாக இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது . இதில் முதல் 16 மாவட்டங்களை சார்ந்த ஆசிரியர்கள் ( இணைப்பு - 1 ) Dr . Ambedkar Goverment Higher Secondary School , Gandhi Irwin Rd , Adikesavarpuram , Egmore , Chennai , Tamil Nadu 600008 என்கின்ற பள்ளி வளாகத்தில் உள்ள Hi - Tech Lab - ல் நடைபெறவிருக்கும் பயிற்சிக்கும் அடுத்த 16 மாவட்டங்களை சார்ந்த ஆசிரியர்கள் ( இணைப்பு - 2 ) Presidency Girls Higher Secondary School , No 100 , Gengureddy Road , Near F2 , Police Station , Egmore , Chennai , Tamil Nadu 600008 என்கின்ற பள்ளி வளாகத்தில் Hi - Tech Lab - ல் நடைபெறவிருக்கும் பயிற்சிக்குரிய இடத்திற்கு காலை 9 . 30க்குள்ளாக அனுப்பிவைக்குமாறு கேட்டுகொள்ளப் படுகிறார்கள்