🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண்- 39

அதிகாரம் :அறன் வலியுறுத்தல்

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் 
 புறத்த புகழும் இல.


பொருள்:

அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

ஏழ்மை என்ற நோய் அகல வேண்டுமானால், உழைப்பு என்ற மருந்தைக் கொடு.

- எமர்சன்
✡✡✡✡✡✡✡✡
பழமொழி  
 இன்று குடிக்கத் தண்ணீர் இல்லை , ஆனைமேல்  அம்பாரி   வேணுமாம்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

Planets - கோள்கள்

1. Sun - சூரியன்
2. Mercury - புதன்
3. Venus - வெள்ளி
4. Mars - செவ்வாய்


✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. தமிழ்நாட்டில் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் ஊர் எது ?

 சிவகாசி

2. தனுஸ்கோடியையும், மெட்ராஸையும் இணைத்த இரயிலின் பெயர் என்ன?

 போர்ட்மெயில்

✡✡✡✡✡✡✡✡
Daily English
Poly syllabic words
1. acceleration - ac-cel-e-ra-tion
2. administrator - ad-min-is-tra-tor
3. curiosity - cu-ri-os-i-ty
4. electricity - e-lec-tri-ci-ty

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

புறா

🐦 புறா முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறக்கும் பறவையினத்தைச் சேர்ந்த, தானிய வகைகளை உணவாக உண்ணும் பயிறுண்ணிப் பறவை ஆகும்.

🐦 இது விதைகள், பழங்கள், செடிகள் போன்றவற்றையும் உட்கொள்ளுகின்றது. புறாக்கள் உலகெங்கிலும் அதிகமாகக் காணப்படுகின்றன என்றாலும், சகாரா பாலைவனம், ஆர்டிக், அண்டார்டிக் பகுதிகளில் இவை காணப்படுவதில்லை.

🐦 புறாக்கள் பல்வேறுபட்ட அளவுகளில் காணப்படுகின்றன. நியூகினியாவைச் சேர்ந்த க்ரோண்ட் புறாக்கள் அளவில் பெரியவை. இரண்டு முதல் நான்கு கிலோ எடையுடையவை.

🐦 மிகச் சிறிய புறாக்கள் ஜெனஸ் கொலம்பினா இனத்தைச் சார்ந்தவை. ஆகும். இவை சுமார் 22 கிராம் எடை உடையவை.

🐦மன்னர்கள் காலத்தில் கடிதப் போக்குவரத்திற்காக புறாக்களை பழக்கப்படுத்தினர். தற்போது வீட்டில் செல்லப் பறவையாக வளர்க்கப்படுகிறது.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

வேலையை ரசித்து செய்

ஒரு தாயும் மகனும் மட்டும் வசித்த வீடு அது. ஏழைக்குடும்பம். வீட்டுத்தலைவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இப்போது தாய்க்கும் உடல் நிலை சரியில்லை. மரணத்தருவாயில் இருந்த தாயிடம் அம்மா நீயும் என்னைவிட்டுப் போய்விடாதே. நீயும் போய்விட்டால் நான் அனாதையாக ஆகிவிடுவேனே? என அவளது கையைப் பிடித்து அழுதான் அவளது பதினைந்து வயது மகன்.

தாய் சொன்னாள். மகனே, எந்தச் சூழ்நிலையிலும் கலக்கம் கூடாது. ஜப்பானிலுள்ள ஹிரோஷிமாவும் நாகசாகியும் எத்தனை அனாதைகளை உருவாக்கியது தெரியுமா? அவர்களெல்லாம் வாழாமல் போய்விட்டார்களா? ஒன்றை மட்டும் புரிந்துகொள். உன் தந்தை அடிக்கடி என்னிடம் ஒரு விஷயத்தை சொல்வார். அதையே உனக்கு சொல்கிறேன் என்ற தாயிடம் அந்த துயரமான சூழ்நிலையையும் மறந்து அவள் சொல்வதைக் கேட்க ஆர்வமானான் மகன்.

மகனே நீ ஒரு கலைஞனாகி விடு பிழைத்துக் கொள்வாய். அதற்காக பெரிய கலைஞன் ஆக வேண்டும் என சொல்லவில்லை. உனக்கு கழிவறை சுத்தம் செய்யும் பணி கிடைத்தால் கூட அதையும் பாக்கியமாக கருதி ரசித்து செய். நீ சுத்தம் செய்வது போல வேறு யாரும் அதை சுத்தம் செய்ய முடியாதபடி இருக்கவேண்டும். உன் வேலையில் ஒரு தனித்துவம் வெளிப்பட வேண்டும் என்றாள். ஆம் உங்கள் வேலையை ரசித்து செய்யுங்கள். ரசித்து செய்யும் வேலையில் தான் சுகமும் திருப்தியும் இருக்கிறது. 
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:

T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.


🔮உத்தரபிரதேச அரசு வழங்கிய 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம் ஏற்றுக்கொண்டது.

🔮வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா மிகவும் கடுமையான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக, டிரம்ப், சமீப காலங்களில் 2-வது முறையாக கூறியுள்ளார்.

🔮வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்டுள்ள நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று டெல்லி ஆளுநர் அனில் பைஜால் தெரிவித்துள்ளார்.

🔮மலேசியாவில் நிலவி வரும் அரசியல் நெருக்கடி காரணமாக பிரதமர் மகாதீர் முகமது தனது ராஜினாமா கடிதத்தை அரசருக்கு அனுப்பியுள்ளார்.

🔮கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 2,592 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதித்த சீனாவுக்கு விமான போக்குவரத்து சேவையை வரும் மார்ச் 15ந்தேதி வரை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது.

🔮இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.

🔮தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 6 மருத்துவக்கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்தது அரசு; 600 சீட் கிடைக்க வாய்ப்பு.


HEADLINES

🔮India, US to sign chopper deals worth USD 3 billion: Trump at Motera.

🔮Twitterati surprised over Donald Trump not mentioning Mahatma Gandhi in visitors' book.

🔮Sunni Waqf Board to accept alternative land near Ayodhya offered by UP government.

🔮4,000-year-old crafts village unearthed near Varanasi.

🔮New Zealand beats India by 10 wickets in series-opening test.

🔮Poonam Yadav grabs three wickets as India beat Bangladesh by 18 runs in Women's T20 World Cup.           🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴