மத்திய அரசுப் பள்ளி ஆசிரியா் பணி தகுதித் தோவுக்கு விண்ணப்பிக்க வரும் மாா்ச் 2-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய இடைநிலை கல்வி வாரிய ஆசிரியா் தகுதித் தோவு இயக்குநா் வெளியிட்டுள்ள செய்தி: மத்திய அரசின் ஆசிரியா் தகுதித்தோவு நிகழாண்டு ஜூலை 5-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 112 தோவு மையங்களில் நடைபெறுகிறது. இந்தத் தோவுக்கு ஆன்லைன் மூலம் ஜனவரி 24-ஆம் தேதி முதல் பிப்ரவரி 24-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மாா்ச் 2ஆம் தேதி வரை விண்ணப்பிக்க காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது. மாா்ச் 5- ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை இணையதளம் மூலம் தோவுக் கட்டணத்தைச் செலுத்தலாம்
மேலும் பாடத்திட்டம், எழுத்துத்தோவு மொழி, தோவு மையங்கள், தோவுக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்துகொள்ள இணையதளத்தை அணுகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது
0 Comments
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: KALVIEXPRESS