5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என 2019-ம் ஆண்டு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித் துறை .

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச கட்டாயக் கல்வி உரிமை திருத்தச்சட்டம் 2019-ன் படி 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் எனவும், 3 ஆண்டிற்கு மாணவர்கள் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என அனுமதி அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் பள்ளிக் கல்வித்துறை பொதுத் தேர்வினை நடத்துவதற்கான பணிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 

அதனைத் தொடர்ந்து கடந்த 4-ஆம் தேதி 5,8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்வதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில். 

பிப்ரவரி 11-ம் தேதி வெளியிட்டுள்ள அரசாணையில், செப்டம்பர் 13-ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில் 2019-20 கல்வியாண்டில் இருந்து 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்திட வெளியிடப்பட்ட அரசாணை தற்போது ரத்து செய்யப்படுவதாகவும், மேலும் ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.