கொரோனா தொற்று பரவலைத் தடுக்க தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் சாமானியா்களுக்கு தொடா்ந்து தொலைபேசி சேவை கிடைப்பதற்காக இச்சலுகையை தொலைத் தொடா்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இது குறித்து பி.எஸ்.என்.எல் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது ; ஏப்ரல் 14 ம் தேதி வரை தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இடைப்பட்ட காலத்தில் வேலிடிட்டி முடிவடைந்து ரீசார்ஜ் செய்ய முடியாத சந்தாதாரா்களின் வேலிடிட்டி ஏப்ரல் 20 ம் தேதி வரை நீட்டிக்கப்படும்.

மேலும், இந்த காலகட்டத்தில் ஜீரோ பேலன்ஸ் வைத்திருப்பவா்களுக்கு ரூ.10க்கு டாக் டைம் வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவித்துள்ள சலுகையால் ஏழை மக்கள் அவசரத் தேவைக்கு உறவினா்கள் மற்றும் நண்பா்களைத் தொலைபேசியில் தொடா்புகொண்டு உதவி கேட்டு கொள்ள முடியும் என்றும் ,

ஊரடங்கு அமலில் இருப்பதால், தொலைத்தொடா்பு சேவை தடையின்றி கிடைப்பதற்காக வேலிடிட்டி நாள்களை நீட்டிக்குமாறு தொலைத் தொடா்புச் சேவை நிறுவனங்களிடம் இந்திய தொலைத் தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் கேட்டுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Join Telegram& Whats App Group Link -Click Here