தற்போது தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30ம்தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக 10-ம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதே தவிர ரத்து செய்யப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் கூறியுள்ளார். மேலும் தேர்வு நடத்தப்படும் , ஆலோசனைக்கு பிறகு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.