1. பல் வகுப்பு கற்பித்தல். ஒரு ஆசிரியர் மருத்துவ விடுப்பு எடுத்தால், பதிலி ஆசிரியர் நியமிக்கப் பட வேண்டும்.

2. அதிகபடியான பாடச்சுமை. கிராமப் புற மாணவர்களுக்கு ஏற்றாற் போல், தொடக்க நிலை வகுப்புகளில் பாடங்களை குறைக்கலாம்.

3. விலையில்லா பொருட்கள் ஆண்டு முழுவதும் வட்டார நோடல் மையத்திலிருந்து பெற்று, பள்ளிக்கு கொண்டு வந்து விநியோகித்து, அதற்கான பதிவேடுகளை பராமரித்தல்.

4. ஈராசிரியர் பள்ளிகளில் 75 க்கும் மேற்பட்ட பதிவேடுகள் பராமரித்தல்

5. தினசரி மாணவர் கற்றலடைவு, மெல்லக் கற்போர் பதிவேடுகள் பராமரித்தல்

6. பள்ளி நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளித்தல்

7. அடிக்கடி விடுப்பு எடுக்கும் மாணவர்களும், அக்கறையில்லா பெற்றோர்களும்

8. பார்வையிடும் அலுவலர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இயலாமை (சிலர் பதிவேடுகளை எதிர் பார்க்கிறார்கள், சிலர் கற்றலடை வை எதிர் பார்க்கிறார்கள், சிலர் பள்ளி கட்டமைப்பை எதிர் பார்க்கிறார்கள்)

9. கற்றல்- கற்பித்தல் தவிர பிற பராமரிப்பு பணிகள், கட்டிடப் பணிகள். மேலும் இவற்றிற்கான பதிவேடுகள் பராமரிப்பு.

10. ஆண்டு முழுவதும் பல்வேறு போட்டிகள் நடத்துதல். (பள்ளி அளவில், வட்டார மற்றும் மாவட்ட அளவில்)

11. ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் மாணவர் சார்ந்த புள்ளிவிவரங்களை வட்டார அலுவலகம், சமக்ர சிக் ஷா அலுவலகம் மற்றும் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்தல். (ஒரே தகவல்களை பள்ளியில் பதிவு செய்தல், இணையத்தில் பதிவு செய்தல், நகல் எடுத்து அலுவலகத்தில் ஒப்படைத்தல்.)

12. மாணவர்களின் கல்வி உதவித் தொகை (3 முதல் 5 வகுப்பு மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ 500 பெற) VAO, RI மற்றும் TALUK அலுவலகம் சென்று, சாதிச் சான்று, குடும்ப அட்டை நகல்களுடன் விண்ணப்பத்தை ஒப்படைத்து,  மீண்டும் ஒரு வாரம் கழித்து TALUK அலுவலகம் சென்று, உரிய சான்றை பெற்று வந்து, அவற்றை நகல் எடுத்து அலுவலகத்தில் ஒப்படைத்தல்.

பணம் வந்த பிறகு BEO அலுவலகத்தில் காசோலை பெற்று, வங்கியில் பணமாக்கி, பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தி, பாஸ் புக் பிரிண்ட் செய்து, பெற்றோரிடம் உரிய பதிவேடு மற்றும் படிவங்களில் கையொப்பம் பெற்று, மீண்டும் அலுவலகத்தில் ஒப்படைத்தல்.

*தீர்வுகள்:*

1. ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணி மட்டுமே வழங்கப் பட வேண்டும்.

2. விலையில்லா பொருட்கள் பெற்று வழங்குதல் மற்றும் பள்ளி அளவிலான பதிவேடுகளை பராமரிக்க பள்ளி சத்துணவு அமைப்பாளர்களை முழு நேர ஊழியராக்கி பயன் படுத்த வேண்டும். பள்ளி வளாகம், கழிப்பறைத் தூய்மை, குடிநீர் சுத்தம் இவற்றிற்கு சத்துணவு அமைப்பாளரை பொறுப்பாளராக்கலாம்.



3. அங்கன் வாடியை தொடக்கப் பள்ளியுடன் இணைப்பதன் மூலம் முன்பருவக் கல்வியின் தரத்தை ஓரளவு மேம் படுத்த முடியும். இதற்கு மழலையர் பயிற்சி பெற்றவர்களை மட்டுமே இனி வருங்காலங்களில் நியமிக்க வேண்டும்.

4. பயிற்சிகளை ஏப்ரல் 21 முதல் 30 முதல் நடத்த வேண்டும். பள்ளி நாட்களில் நடத்துவதை தவிர்க்க வேண்டும்.

5. ஈராசிரியர் பள்ளிகளில் பார்வையிடும் அலுவலர்கள் பதிவேடுகளுக்கு முக்கியத்துவம் தருவதை தவிர்த்து, மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் வாசித்தல், கணித அடிப்படை செயல்பாடுகளில் அடைவு குறித்து மட்டுமே ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். 

6. பள்ளி கட்டுமானம் மற்றும் இது தொடர்பான பதிவேடுகள் பராமரிப்பதிலிருந்து ஆசிரியர்கள் விடுவிக்கப் பட வேண்டும். ஒன்றியம் அல்லது பொதுப்பணித் துறை மூலம் இப்பணிகளை மேற்கொள்ளலாம்.

7. ஆன்லைன் மற்றும் எமிஸ் பணிகளுக்கு அருகில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கணிப்பொறி ஆசிரியர்களை பயன் படுத்த வேண்டும். இவர்கள் தங்கள் அருகில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்குச் சென்று, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியரிடம் பள்ளி மற்றும் மாணவர் சார்ந்த விவரங்களை உரிய படிவங்களில் அல்லது பதிவேடுகளின் மூலம் பெற்று, இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.

8. மாதந்தோறும் முதல் திங்கள் பிற்பகலில் தலைமை ஆசிரியர் கூட்டம் நடத்தி விவரங்களை பெற வேண்டும். பிற நாட்களில் தலைமை ஆசிரியர் கூட்டம் நடத்துவதோ, புள்ளி விவரங்களை உடனடியாக அலுவலகத்தில் ஒப்படைக்க வற்புறுத்தக் கூடாது.

9. மாணவர் ஆதார் பெற்றதை உறுதி செய்வதையும், மூவகை சான்று பெறுதல் மற்றும் கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்கவும், VAO அவர்களை பொறுப்பாக்க வேண்டும். கல்வி உதவித் தொகையை மாவட்ட நிர்வாகமே, மாணவரின் பெற்றோர் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்.

 10. மாணவர் இரத்த வகை கண்டறிய VHN பொறுப்பாளராக்க வேண்டும். ஆண்டு தோறும் நடைபெறும் மருத்துவ முகாமில், புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு இரத்த வகை கட்டாயம் கண்டறிய வேண்டும். எமிஸ் இணைய தளம், சுகாதாரத் துறையுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

11. ஆண்டு முழுவதும் பல்வேறு போட்டிகள் பள்ளி/ வட்டார/மாவட்ட அளவில் நடத்துவதை விட, பருவத்திற்கு ஒரு முறை (ஆகஸ்ட் 15, நவம்பர் 14, ஜனவரி 26) தேதிகளில் நடத்துவது நல்லது. 

12. விலையில்லா பொருட்களை பள்ளி திறந்த பின் வழங்குவதை விட, பருவ விடுமுறைக்கு முன்பே வழங்கினால் மாணவர்கள் புத்தகம் மற்றும் குறிப்பேடுகளுக்கு அட்டை போட்டு, பள்ளி திறக்கும் நாளில் கொண்டு வர வசதியாக இருக்கும்.

13. ஒரே கற்பித்தல் முறையை ஆசிரியர்களிடம் திணிக்காமல், சூழலுக்கும் மாணவர்களுக்கும் பொருத்தமான கற்பித்தல் முறையை ஆசிரியர் கடைபிடிக்க சுதந்திரம் வழங்க வேண்டும்.

14. அனைத்து பள்ளிகளிலும் இணைய இணைப்புடன் கூடிய LCD Projector வசதி ஏற்படுத்த வேண்டும்.

 15. அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள் சார்ந்த கருத்துக்கள் மாணவர் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம், அனிமேஷன் முறையில் தயாரிக்கப் பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.