கல்லூரிகளில் இறுதியாண்டு இல்லாத மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து.

கல்லூரிகளில் நடப்பு பருவதேர்வுக்கு மட்டும் விலக்களிக்க அனுமதி.

யூஜிசி, ஏஐசிடிஇ வழிகாட்டுதல் படி மதிப்பெண்கள் வழங்கப்படும் - முதலமைச்சர்.

இறுதியாண்டு மாணவர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு நடப்பு பருவத்தேர்விலிருந்து விலக்கு.

முதுகலைப் பட்டப் படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கு இந்தப் பருவத்திற்கு தேர்வில் இருந்து விலக்கு.

இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் 3ஆம் ஆண்டு மாணாக்கர்களுக்கு இந்த பருவத் தேர்வில் இருந்து விலக்கு.

முதுகலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கு இந்த பருவத் தேர்வில் இருந்து விலக்கு.

எம்சிஏ முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும் இந்த பருவத் தேர்வில் இருந்து விலக்கு.