கடந்த 2012-ஆம் ஆண்டு தமிழகத்தில் உடற்கல்வி, இசை, ஓவியம் மற்றும் கலைத்தொழில் உள்ளிட்ட பாடங்களுக்கு 16 ஆயிரத்து, 549 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு மூன்று மணிநேரம் வீதம், வாரத்தில் மூன்று நாட்களும், மாதம், 12 நாட்கள் மட்டுமே வேலை நாள்களாகும்.

இவர்களுக்கு ஜூன் முதல் ஏப்ரல் மாதம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. மே மாத சம்பளம் கொடுப்பதில்லை. இந்நிலையில், கொரோனா தொற்றால் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதம் ஊதியம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி திறந்ததும் ஜூலை மாதத்திற்கான வேலை நாட்களை ஈடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Join Telegram& Whats App Group Link -Click Here