கல்லூரி இறுதி தேர்வு தவிர பிற பருவ பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து –முதல்வர் 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள் இன்று கல்லூரி தேர்வு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையின்படி 

கொரோனா நோய் தொற்று காரணமாக, உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும், பல்கலைக்கழக மானியக்குழு  (UGC) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE)  ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி மதிப்பெண்கள் வழங்கி

1. முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை
பட்டப்படிப்பில் பயிலும் மாணாக்கர்களுக்கும் மற்றும் பலவகை தொழில் நுட்பக்
பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கும்,
2. முதுகலைப் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும்,
3. இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும்
4. முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும்
5.அதேபோன்று, எம்.சி.ஏ. முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும்

இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்குச் செல்ல நான் 23.7.2020 அன்று உத்தரவிட்டிருந்தேன். அதன் அடிப்படையில், உயர்கல்வித்துறை 27.7.2020 அன்று விரிவான வழிகாட்டுதல்களை வழங்கி அரசாணை வெளியிட்டது.

தற்போது மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர பிற பருவப்பாடங்களின்  தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணாக்கர்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு(UGC)மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE)  ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி தேர்வு எழுதுவதிலிருந்து
விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும். இது குறித்து விரிவான ஒரு அரசாணையை வெளியிட உயர்கல்வித் துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். என அந்த அறிக்கையில் குறிபிட்டுள்ளார் 

மேலும் உயர்கல்வி துறை அமைச்சர் அறிவிப்பின்படி 
கல்லூரி முடித்து எத்தனை ஆண்டுகள் ஆகி இருந்தாலும் தேர்வுகட்டணம் செலுத்தியிருந்தால் தேர்ச்சி 

அரியர்ஸ் தேர்வுக்கான் கட்டணத்தை மாணவர்கள் செலுத்தியிருந்தால் தேர்ச்சி 




Join Telegram& Whats App Group Link -Click Here