EMIS STUDENTS PROMOTION- STEPS

எமிஸ் (EMIS) தளத்தில் தேர்ச்சி வழங்குவதற்கான பொதுவான வழிமுறை


1.முதலில் பள்ளியில் இறுதி வகுப்பு ( மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு. பன்னிரண்டாம் வகுப்பு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு / நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு / துவக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு) பயின்ற மாணவர்களது விபரங்கள் மற்றும் பள்ளி மாறுதல் காரணமாக மாற்றுச் சான்றிதழ் கோரிய இதர வகுப்பு மாணவர்களது விபரங்கள் மாற்றுச் சான்றிதழ் தயார் செய்யப்பட்டு, Common Pool க்கு அனுப்பப்பட்டு இருக்க வேண்டும்.

மேற்கண்ட பணி முடிக்கப்பட்டதை உறுதி செய்த பின்பு, பள்ளியின் எமிஸ், தளத்தில் School  class and Section வாயிலாக தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து வகுப்புகள் / பிரிவுகள் சரியாக உள்ளதையும், ஒவ்வொரு வகுப்பு பிரிவிற்கான Medium (For all Classes)& Group Code (Only For Higher Secondary ) சரியாக உள்ளதையும் கட்டாயம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

emis kalviexpress


எமிஸ் EMIS தளத்தில் தேர்ச்சி வழங்கும் போது இறங்கு வரிசைமுறையில் (11,9,8,7,6,5,4,2,2,1,ukg, lkg ) வகுப்புகளைத் தேர்வு செய்து தேர்ச்சி வழங்குதல் வேண்டும்.

அதற்கு  பள்ளியின் எமிஸ் EMIS  தளத்தில்  Students--> Student promotion வாயிலாக தங்கள் பள்ளி மாணவர்களுக்கு கீழ்க்கண்ட படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு வகுப்பு பிரிவினைத் தேர்வு செய்து, Get Student List  மூலம் மாணவர்களின் பெயர் பட்டியலை பெற்ற உடன், அம் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்கப்படும் அடுத்த உயர் வகுப்பு பிரிவினை தேர்வு செய்து >>  என்பதை கிளிக் செய்தவுடன் மாணவர்களது பெயர்கள் அடுத்த உயர் வகுப்புபிரிவிற்கான பட்டியலில் தோன்றும், அதனைத் தொடர்ந்து Promote  என்பதை தேர்வு செய்தபின்  Are You sure you want to Promote _student ? என்ற வினாவிற்கு Yes  என தேர்வு செய்து குறிப்பிட்ட வகுப்பு பிரிவிற்கு தேர்ச்சி வழங்கும் பணியானது நிறைவுபெறும்.




ஒரு வகுப்பு பிரிவிற்கான தேர்ச்சி வழங்கும் பணியை முடித்த உடன் Ctr+Shift+R என்பதை கிளிக் செய்து அப்பக்கத்தினை refresh செய்து கொள்ளுதல் வேண்டும். இதே வழிமுறையை பின்பற்றி ஏனைய பிற வகுப்பு பிரிவிற்கும் தேர்ச்சி வழங்குதல் வேண்டும்.

மேல்நிலைப்பள்ளிகளில் (EMIS_ STUDENTS PROMOTION- STEPS Higher secondary schools)


Step 1:  கடந்த கல்வியாண்டில் (2019-2020) பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற மாணவர்களுக்கு எமிஸ்  EMIS தளத்தில் மாற்றுச் சான்றிதழ் தயார் செய்து, அம்மாணவர்களது விபரங்களை Common Pool ற்கு அனுப்பிய பின்பே, (அதாவது EMIS School login ல்  10,12ஆம் வகுப்புகளில் எந்த ஒரு மாணவரது பதிவும் இருத்தல் கூடாது; / மற்ற வகுப்புகளில் மாற்றுச் சான்றிதழ் கோரும் பெற்றோரின் கோரிக்கைக்கிணங்க மாற்றுச் சான்றிதழ்களை எமிஸ் இணையதளம் வாயிலாக தயார் செய்து வழங்கிய பின்பே, Promotion வழங்கும் பணியை தொடங்குதல் வேண்டும்.

Step 2: கடந்த கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்.
Step 3: கடந்த கல்வியாண்டில் 9ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்.
Step 4: கடந்த கல்வியாண்டில் 8ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்.
Step 5: கடந்த கல்வியாண்டில் 7ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்.
Step 6: கடந்த கல்வியாண்டில் 6ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்.


உயர்நிலைப்பள்ளிகளில் (EMIS_ STUDENTS PROMOTION- STEPS -High schools)


Step 1: கடந்த கல்வியாண்டில் (2019-2020) பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு எமிஸ் EMIS தளத்தில் மாற்றுச் சான்றிதழ் தயார் செய்து, அம்மாணவர்களது விபரங்களை common poole அனுப்பிய பின்பே, (அதாவது அதாவது EMIS School login ல்  10ஆம் வகுப்புகளில் எந்த ஒரு மாணவரது பதிவும் இருத்தல் கூடாது) / மற்ற வகுப்புகளில் மாற்றுச் சான்றிதழ் கோரும் பெற்றோரின் கோரிக்கைக்கிணங்க மாற்றுச் சான்றிதழ்களை எமிஸ் EMIS  இணையதளம் வாயிலாக தயார் செய்து வழங்கிய பின்பே Promotion வழங்கும் பணியை தொடங்குதல் வேண்டும்.

Step 2: கடந்த கல்வியாண்டில் 9ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்.
Step 3: கடந்த கல்வியாண்டில் 8ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்.
Step 4:  கடந்த கல்வியாண்டில் 7ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி 
Step 5: கடந்த கல்வியாண்டில் 6ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்.

நடுநிலைப்பள்ளிகளில் (EMIS_ STUDENTS PROMOTION- STEPS -Middle schools)

Step 1: கடந்த கல்வியாண்டில் (2019-2020) எட்டாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு எமிஸ் EMIS தளத்தில் மாற்றுச் சான்றிதழ் தயார் செய்து, அம்மாணவர்களது விபரங்களை common poole அனுப்பிய பின்பே, (அதாவது அதாவது EMIS School login ல் 8ஆம் வகுப்புகளில் எந்த ஒரு மாணவரது பதிவும் இருத்தல் கூடாது) / மற்ற வகுப்புகளில் மாற்றுச் சான்றிதழ் கோரும் பெற்றோரின் கோரிக்கைக்கிணங்க மாற்றுச் சான்றிதழ்களை எமிஸ் EMIS இணையதளம் வாயிலாக தயார் செய்து வழங்கிய பின்பே, Promotion வழங்கும் பணியை தொடங்குதல் வேண்டும்.

Step 2: கடந்த கல்வியாண்டில் 7ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்.
Step 3: கடந்த கல்வியாண்டில் 6ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்.
Step 4: கடந்த கல்வியாண்டில் 5ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்.
Step 5: கடந்த கல்வியாண்டில் 4ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்.
Step 5: கடந்த கல்வியாண்டில் 3ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்.
Step 5: கடந்த கல்வியாண்டில் 2ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்.
Step 5: கடந்த கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்.
Step 5: கடந்த கல்வியாண்டில் UKG வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்.
Step 5: கடந்த கல்வியாண்டில் LKG வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்.

தொடக்கப்பள்ளிகளில் (EMIS_ STUDENTS PROMOTION- STEPS -Primary School )


Step 1: கடந்த கல்வியாண்டில் (2019-2020) ஐந்தாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு எமிஸ் EMIS தளத்தில் மாற்றுச் சான்றிதழ் தயார் செய்து, அம்மாணவர்களது விபரங்களை common poole  அனுப்பிய பின்பே, (அதாவது EMIS School login  5ஆம் வகுப்புகளில் எந்த ஒரு மாணவரது பதிவும் இருத்தல் கூடாது) / மற்ற வகுப்புகளில் மாற்றுச் சான்றிதழ் கோரும் பெற்றோரின் கோரிக்கைக்கிணங்க மாற்றுச் சான்றிதழ்களை எமிஸ் EMIS இணையதளம் வாயிலாக தயார் செய்து வழங்கிய பின்பே, Promotion வழங்கும் பணியை தொடங்குதல் வேண்டும்.

Step 2: கடந்த கல்வியாண்டில் 4ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்.
Step 3: கடந்த கல்வியாண்டில் 3ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்.
Step 4: கடந்த கல்வியாண்டில் 2ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்.
Step 5: கடந்த கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல்.

அனைத்து வகைப்பள்ளிகளில் தேர்ச்சி (Promotion To Next Class ) வழங்கும் பணிகளை அனைத்து வகுப்புகளுக்கும் முடித்த பின்பே, இக்கல்வியாண்டில் (2020-21) தங்களது பள்ளியில் புதிதாக சேர்க்கை செய்யப்பட்டுள்ள மாணவர்களது விபரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.



Join Telegram& Whats App Group Link -Click Here