RTE ACT-2009 -25% Reservation Admission Process And Time Schedule -2020-21

2020-2021 ஆம்‌ கல்வியாண்டில்‌ 25% இட ஒதுக்கீட்டின்கீழ்‌ சேர்க்கை நடைமுறைகள்‌ சார்ந்து அறிவுரைகள்‌ .


✔ Time Schedule - Academic Year 2020-21 -Download 

✔ தமிழ் நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் செயல்முறை   Download 

✔ GO No 273 Date - 13.08.2020-Download 

1, சிறுபான்மையற்ற தனியார்‌ சுயநிதிப்‌ பள்ளிகளில்‌ தொடக்கநிலை வகுப்புகளில்‌ (எல்கே.ஜி அல்லது 1ஆம்‌ வகுப்பு) பள்ளி வாரியாக உள்ள மொத்த இடங்கள்‌ மற்றும்‌ 25 விழுக்காடு இடங்கள்‌ ஆகிய விவரங்களை இணையதளம்‌, உள்ளூர்‌ செய்தித்தாள்கள்‌, CEO,DEO,SSA,BEO அலுவலக தகவல்‌ பலகைகள்‌, சம்பந்தப்பட்ட பள்ளி தகவல்‌ பலகைகள்‌ ஆகியவற்றில்‌ அறிவிப்பு செய்ய வேண்டும்‌.

2, சட்டப்பிரிவு 12 (1 (சீ) இன்‌ கீழ்‌ சேர்க்கை வழங்க, தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும்‌ கட்டாயக்கல்வி உரிமை விதிகள்‌, 2011 விதி எண்‌ 4(இன்படி எல்‌.கே.ஜி அல்லது முதல்‌ வகுப்பிற்கு அருகாமையிடம்‌ என்பது 1 கிலோ மீட்டர்‌ ஆகும்‌.

3, சட்டப்பிரிவு 12 (1 (சி) இன்‌ கீழ்‌ சேர்க்கை கோரும்‌ குழந்தைகளின்‌ பெற்றோர்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்‌ இணையதளத்தில்‌ இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்‌. இணையதள முகவரி emis.tnschools.gov.in.

4. பெற்றோர்கள்‌ இணைய ஷியாக எங்கிருந்து வேண்டுமானாலும்‌
விண்ணப்பிக்கலாம்‌. மேலும்‌, முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ / மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ / வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ / அனைவருக்கும்‌ கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களில்‌, சட்டப்பிரிவு12 (1(சி) இன்‌ கீழ்‌ சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணைய வழியில்‌ விண்ணப்பிக்கத்‌ தக்க ஏற்பாடுகள்‌ செய்யப்பட வேண்டும்‌.

5. அந்தந்த பள்ளிகளில்‌ விண்ணப்பங்கள்‌ ஏதேனும்‌ பெறப்பட்டால்‌, சார்ந்த பெற்றோர்களுக்கு ஒப்புகைச்‌ சீட்டு (அஆ, (நிலை) எண்‌. 60 பள்ளிக்‌ கல்வித்‌ துறை நாள்‌ 01.04.2013இல்‌ உள்ள ஒப்புகைச்‌ சீட்டில்‌) உடன்‌ தவறாது வழங்கப்படவேண்டும்‌. இவ்விண்ணப்பங்களைப்‌ பள்ளியிலேயே இணைய வழியில்‌ பதிவேற்றம்‌ செய்யலாம்‌ அல்லது அருகிலுள்ள வட்டார வள மையங்கள்‌ / வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ / மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌!முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ அலுவலகங்களில்‌ கொடுத்து இணைய வழியில்‌ பதிவேற்றம்‌ செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.

6. ஒவ்வொரு தனியார்‌ சுபநிதிப்‌ பள்ளிகளிலும்‌, தகவல்‌ பலகையில்‌ அந்த பள்ளிக்கு நிர்ணமிக்குப்பட்டுள்ள இடங்ளைக்‌ குறிப்பிட்டு 17.08.2020 அன்று 12 (1(சி)   இன்‌ கீழ்‌ 25% சேர்க்கைக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடவேண்டும்‌.

7. 27.08.2020 முதல்‌ 25.09.2020 வரை இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்‌

8. இதன்பொருட்டு மேற்குறிப்பிட்ட்ளள அனைத்து அலுவலகங்களிலும்‌, விண்ணப்பங்களைப்‌ பதிவேற்றம்‌ செய்யத்‌ தேவையான அனைத்து வசதிகளும்‌ செய்யப்பட வேண்டும்‌. மேற்குறிப்பிட்டுள்ள 27.08.2020 முதல்‌ 25.09.2020 வரை மேற்படி பத்தி 4இல்‌ குறிப்பிட்டுள்ள அனைத்து அலுவலகங்களிலும்‌ இணைய வசதி, கணினி, சான்றுகளை பதிவேற்றம்‌ செய்யத்‌ தேவையான Scanner  வசதி, கணினி இயக்குபவர்‌ ஆகியவற்றை 26.08.2020 அன்றே தயார்‌ நிலையில்‌ வைத்திருக்க வேண்டும்‌. இதனை மாவட்ட முதன்மைக்‌ சுல்வி அலுவலர்கள்‌ உறுதி செய்துகொள்ள வேண்டும்‌.

9. குழந்தைகளுக்கான இலவச மற்றும்‌ கட்டாயக்‌ கல்வி உரிமைச்‌ சட்டம்‌, 2009ஐ நடைமுறைப்படுத்துதல்‌ சார்ந்து அந்தந்த மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள் ‌மாவட்டத்‌ தொடர்பு அலுவலர்‌ என்பதால்‌, மேற்படி அனைத்து பணிகளையும்‌ மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ ஒருங்கினைத்துச்‌ செய்து முடிக்கக்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறது.

10. மாணவர்கள்‌ சேர்க்கை பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே சென்றடையும்‌ வகையில்‌ அனைத்து சிறுபான்மையற்ற தனியார்‌ சுயநிதி பள்ளிகளிலும்‌ பள்ளியின்‌ பிரதான நுழைவு வாயில்   MAIN GATE பொதுமக்களுக்கு நன்கு தெரியும்‌ வகையில்‌ பள்ளிப்‌ பெயர்‌ பலகைக்கு அருகிலும்‌, பொதுமக்கள்‌ பெருமளவில்‌ கூடும்‌ இடங்களிலும்‌ 60” அடி அளவில்‌ கடந்த ஆண்டுகளில்‌ வைக்கப்பட்டதுபோல்‌ அனைத்து விவரங்களையும்‌ உள்ளடக்கிய அறிவிப்புப்‌ பலகை (flex Bord) வைக்கப்படல்‌ வேண்டும்‌.

11. பார்வை-7இல்‌ உள்ள அரசாணை இணைப்பு-2 பத்தி- 1 முதல்‌4 வரை (Annexure-II - Paragraph I to IV) குறிப்பிட்டுள்ள நிலையான செயல்பட்டு வழிமுறைகளை (Standard Operating procedure) பின்பற்றி சேர்க்கைக்கான நடைமுறைகள்‌ மேற்கொள்ளப்படவேண்டும்‌.

12. பார்வை-8இல்‌ உள்ள அரசுக்‌ சுடித நகல்‌ இத்துடன்‌ இணைக்கப்பட்டுள்ளது. அதில்‌ தெரிவிக்கப்பட்டுள்ள அட்டவணையின்படி 2020-2021ஆம்‌ ஆண்டிற்கான 25% இட ஒதுக்கீட்டின்‌ கீழ்‌ சேர்க்கை நடைமுறைகள்‌ மேற்கொள்ளப்பட்டு, வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்‌ நலிவடைந்த பிரிவினரின்‌ குழந்தைகள்‌ பயனடையும்‌ வண்ணம்‌ நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கம்‌ தெரிவிக்கலாகிறது

Join Telegram& Whats App Group Link -Click Here