DEE – All CEO ,DEO ,BEO Video Conference Meeting Conduct At Sep 29
தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 6. ந.க.எண். 10390 / ஜே2 / 2020 நாள் : 22.09.2020.
அனைத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் காணொலிக் காட்சி (Video Conference) வாயிலாக அந்தந்த மாவட்ட NIC Center 28.09.2020 திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் 5.45 மணி வரை மதிப்புமிகு பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. மேலும் பள்ளிக் கல்வித் துறை ஆணையர், பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் கல்வித்துறை உயர் அலுவலர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஆய்வு செய்ய உள்ளனர். எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் இக்கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கூட்டப் பொருள் சார்ந்த அனைத்து படிவங்களையும் பூர்த்தி செய்து 25.09.2020 பிற்பகல் மின்னஞ்சல் முகவரியில் அனுப்பிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
All CEO DEO BEO Meeting Agenda
மாவட்ட NIC Center சமூக இடைவெளியுடன் அமர்வதற்கு போதுமான இடவசதி இருப்பின் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களும் கூட்டத்தில் பங்கேற்கலாம். இடவசதி குறைவாக இருப்பின் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஒன்றியத்திற்கு ஒரு வட்டாரக் கல்வி அலுவலர் (பணிமூப்பில் உள்ளவர் ) மட்டும் கலந்துகொள்ள சுற்றறிகை அனுப்பியுள்ளார்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..