OBC சான்று அளிப்பது தவிர்ப்பது மற்றும் அதில் விதிவிலக்கு விபரங்கள்


தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கடிதம் எண் _4938/BCC/2004-1 Dt 20/07/2011 ன்படி  Creamy Layer க்கு உட்பட்டவர்களுக்கு OBC சான்று அளிப்பது தவிர்ப்பது மற்றும் அதில் விதிவிலக்கு விபரங்கள் 

OBC சான்று யாருக்காக விண்ணப்பிக்கப்படுகிறதோ அவர்களின் பெற்றோர் கீழ்க்கண்டவர்களில் ஒருவராயிருந்தால் அவர்கள் OBC சான்று பெற தகுதி அற்றவர்கள் ஆவர்.

1. இந்திய அரசியலமைப்புப் பதவியில் உள்ளவர்கள்.

2. பெற்றோரில் ஒருவர் (அல்) இருவரும் Class I / Group 'A அலுவலராக நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்டிருந்தால்.

3, பெற்றோரில் இருவரும் Class I / Group 'A ' அலுவலராக நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்டும். அதில் ஒருவர் இறந்துவிட்டிருந்தாலும் (அல்) நிரந்தர இயலாமையினால் பாதிக்கப்பட்டிருந்தாலும்.

4. பெற்றோரில் ஒருவர் (அல்) இருவரும் Class I / Group 'Aஅலுவலராக நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்டூம், அதில் ஒருவர் இறந்துவிட்டிருந்தாலும் (அல்) நிரந்தர இயலாமையினால் பாதிக்கப்படுவதற்கு முன்பு 5 வருடத்திற்கு மேல் UN, IMF, World Bank போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் பதவி வகித்திருந்தால்.

5, பெற்றோரில் இருவரும் Class II / Group 'B' அலுவலராக நேரடி நியமனம் மூலம் மத்திய, மாநில அரசுப் பணிகளில் நியமிக்கப்பட்டிருந்தால்.

6. பெற்றோரில் கணவர் மட்டும் Class II / Group 'B'அலுவலராக நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்டு நாற்பது வயதுக்குள் Class I / Group 'A'  அலுவலராக பதவி உயர்வு பெற்றிருந்தால்.

7. பெற்றோரில் இருவரும் Class II / Group 'B'  அலுவலராக நேரடி நியமனம்
மூலம் நியமிக்கப்பட்டும், அதில் ஒருவர் இறந்துவிட்டிருந்தாலும் (அல்) நிரந்தர இயலாமையினால் பாதிக்கப்படூவதற்கு முன்பு 5 வருடத்திற்கு மேல் UN, IMF, World Bank  போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் பதவி வகித்திருந்தால்.

8. பெற்றோர்களின் வருட வருமானம் ₹ 8 லட்சத்திற்கு மேல் இருந்தால்.
(சம்பளம் மற்றும் விவசாயம் மூலம் ஈட்டப்படும் வருமானத்தை கணக்கில் எடூத்துக்கொள்ள வேண்டியது இல்லை.

9. மேற்கண்ட விதிகளுக்கு உட்படாத மற்றும் மத்திய, மாநில் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் சாதிகளைச் சார்ந்த அனைவரும் OBC  சான்று பெற தகுதியானவர்கள் ஆவர்.

 OBC Guidelines and GOs List Download 




Join Telegram& Whats App Group Link -Click Here