online class நிறுத்தி வைத்தல் தொடர்பான பள்ளிகல்வி துறை அரசானை 


‌, கொரானா பரவல்‌ காரணமாக பொதுமுடக்கம்‌ அறிவிக்கப்பட்டு 25.03.2020 முதல்‌ பள்ளிகள்‌ மூடப்பட்டு,இதுவரை பள்ளிகள் 
திறக்கப்படவில்லை என்றும்‌, மாணாக்கர்களுக்கு கற்றல்‌ கற்பித்தல்‌ பணி பாதிப்படையக்‌கூடாது என்பதால்‌, 2020-2021ஆம்‌ கல்வி ஆண்டிற்கான பாடங்களை இணைய வழியாகநடத்துவதற்கு அரசாணை (நிலை) எண்‌.65, கல்வித்துறை, நாள்‌ 29.07.2020ல்‌ விரிவான
வழிகாட்டு நெறிமுறைகள்‌ வழங்கப்பட்டுள்ளன என்றும்‌, பள்ளி மாணாக்கர்கள்‌ தொடர்ந்து இணைய வழி வகுப்புகள்‌ மூலம்‌ கல்வி பயின்று வருகின்றனர்‌ என்றும்‌, ஒவ்வொரு கல்வியாண்டிலும்‌, செப்டம்பர்‌ மாதம்‌ நான்காவது வாரம்‌ காலாண்டுத்‌ தேர்வு
விடுமுறை விடப்படும்‌ என்றும்‌, இது சம்பந்தமாக மாண்புமிகு பள்ளிக்‌ கல்வி, இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்‌ அவர்களின்‌ செய்தி வெளியீட்டில்‌, 21.09.2020 முதல்‌ 25.09.2020 வரை இணைய வழி வகுப்புகள்‌ நடைபெறாது  என செய்தி வெளியிட்டுள்ளார்கள்‌ என்றும்‌, அதன்படி 2020-2021-ம்‌ கல்வியாண்டில்‌, 21.09.2020 முதல்‌ 25.09.2020 வரை ஐந்து நாட்களுக்கு அனைத்து வகைப்‌ பள்ளிகளிலும்‌ இணைவழி  வகுப்புகள்‌ எடுப்பதை நிறுத்தி வைக்கலாம்‌ என்றும்‌, இது தொடர்பாக உரிய ஆணை வழங்குமாறு மெட்ரிகுலேசன்‌ பள்ளிகள்‌ இயக்குநர்‌ அரசைக்‌ கேட்டுக்‌ கொண்டுள்ளார்‌. அவரது கருத்துருக்களை ஏற்று இணைய வழி வகுப்பு எடுப்பதை நிறுத்திவைத்து அரசு ஆனையிடுகிறது 

online class suspension Order Copy page 1
online class suspension Order Copy page 2





Join Telegram& Whats App Group Link -Click Here