RTI –GO. 37  Date -10.03.2020 உயர்கல்வி ஊக்க ஊதியத்தை நிறுத்துவது தொடர்பாக  கருவூலங்களுக்கு உத்தரவு ஏதும் பிறப்பிக்க வில்லை - கருவூல ஆணையரகம்

    அரசாணை 37, நாள் : 10.03.2020 தொடர்பாக  திரு V சிங்காரம் என்பார் தகவல் பெறும் சட்டம் 2005 யில் பொது தகவல் அளிக்கும் அலுவலர் , கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையர் அலுவலகம், நந்தனம், சென்னை - 35. அவர்களிடம் சில வினாக்களுக்கு பதில் தருமாறு வேண்டிருந்தார் அதற்கான RTI பதில்கள் அணுப்பபட்டுள்ளது . அவர் கோரிய கேள்விகள் மற்றும் RTI  பதில் கீழே தரப்பட்டுள்ளது 
.

கேள்வி -1. 
       அரசாணை 37, நாள் : 10.03.2020 தொடர்பாக, மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களுக்கு, கருவூல ஆணையர் அலுவலர் அலுவலகத்திலிருந்து ஏதேனும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதா அதன் விபரம் தருக.

RTI –பதில் 1  : 
    அரசாணை எண்.37, நாள்10.03.2020 இவ்வலுவலகத்தால் மேற்குறிப்பிட்டு அனைத்து மாவட்ட கருவூலங்களுக்கும் 18.03.2020-ல் அனுப்பப்பட்டது. இது தொடர்பாக உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்பட வில்லை என தெரிவிக்கலாகிறது.

கேள்வி -2. 
    அரசாணை 37, நாள் : 10.03.2020 அனைத்துத்துறை அரசு ஊழியர்களுக்கும் பொருந்துமா என்பதற்கான விபரம் - தேவை.

RTI –பதில் 2  :
    அரசாணை எண்.37, நாள்.10.03.2020-ன் பத்தி 2ல் பொருந்தக் கூடிய துறைகளின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கலாகிறது

கேள்வி -3. 
    அரசாணை 37, நாள் : 10.03.2020 ஆசிரியர்களுக்குப் பொருந்துமா என்ற விபரம் தருக.

கேள்வி -4. 
    மேற்படி அசாணை ஆசிரியர்களுகுகுப் பொருந்துமெனில் அவ்வரசாணையின் எந்த சரத்து அல்லது எந்த பத்தியில், ஆசிரியர்களின் உயர்கல்வி ஊக்க ஊதியம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது என்ற விபரம் தருக.

RTI –பதில் 3,4:  
    அரசாணை எண்.37, நாள்.10.03.2020, அனைத்து துறையினருக்கும் பொருந்தும் என ஆணையிடப்பட்டுள்ளது. ஆசிரியருக்கு பொருந்துமா என தெளிவுரை கோரி அரசுக்கு கடிதம் இவ்வலுவலகத்திலிருந்து எழுதப்பட்டுள்ளது. அரசிடமிருந்து பதில் இதுவரை பெறப்படவில்லை.


கேள்வி -5. 
    ஆசிரியர்களின் உயர் கல்விக்கான ஊதியத்தை நிறுத்துவது தொடர்பாக மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களுக்கு வாய்மொழியாகவோ அல்லது எழுத்துப் பூர்வமாகவோ உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்பட்டுள்ளதா என்ற விபரம் தருக.

கேள்வி -6. 
        ஆசிரியர்களின் உயர்கல்வி ஊக்க ஊதியம் நிறுத்தம் தொடர்பாக இவ்வலுவலகம் மூலம் ஏதேனும் உத்தரவு பிறப்பித்திருப்பின், எந்த அரசாணையின்படி அவ்வாறான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்ற விபரம் தருக.

RTI –பதில் 5,6:  
    ஆசிரியர்களின் உயர்கல்விக்கான ஊதியத்தை நிறுத்துவது தொடர்பாக மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களுக்கு உத்தரவு ஏதும்பிறப்பிக்கப்படவில்லை என தெரிவிக்கலாகிறது.

கேள்வி -7. 
    அரசாணை 37, நாள் : 10.03.2020ன் பார்வையில், ஆசிரியர்களின் உயர்கல்வி ஊக்க ஊதியம் தொடர்பான அரசாணைகள் எதனையும் காட்டப்பட்டுள்ளதா என்ற விபரம் தருக.

கேள்வி -8. 
    ஆசிரியர்களின் உயர்கல்வி ஊக்க ஊதியம் தொடர்பான அரசாணைகள் எதையும் ரத்து செய்து, அரசு ஏதும் உத்தரவு பிறப்பித்து கருவூல ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதா என்ற விபரம் தருக,

RTI –பதில் 7,8:  
    இது குறித்த விவரம் இவ்வலுவலகத்தில் இல்லை என தெரிவிக்கலாகிறது. :

கேள்வி - 9. 
    தற்போது ஆசிரியர்களுக்கு உயர்கல்வி ஊக்க ஊதியம் வேண்டி பட்டியல் சமர்ப்பிக்கப்படும் போது அனுமதிக்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா நிராகரிக்கப்படுமெனில் அதற்கான காரணத்தை விளக்கமுடன் தருக.

RTI –பதில் 9:
    தனியார் கோரும் தகவல் யூகத்தின் அடிப்படையில் உள்ளதால் பதில் அளிக்க 2(9)ன் படி வழிவகையில்லை என தெரிவிக்கலாகிறது.

இணைப்பு 1 - கேள்வி கடிதம் 
இணைப்பு 2 -  RTI பதில்  கடிதம் 




Join Telegram& Whats App Group Link -Click Here