விஜயதசமி தினத்தன்று தமிழக பள்ளியில் சேர்க்கை நடைபெறும் 

  
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் விஜயதசமி தினத்தன்று பெற்றோர்கள் தங்கள். குழந்தைகளை முதன்முதலாக பள்ளியில் சேர்ப்பது நடைமுறையில் இருந்து வருகின்ற வழக்கமாகும். எனவே அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் (26:10.2020 விஜயதசமி. நாளன்று மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்தல் சார்பாக தொடக்க கல்வி இயக்குநர்   கீழ்கண்ட அறிவுரைகள் அனைத்து மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவித்துள்ளார் 

 அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு பெற்றோர்கள் அறியும் வண்ணம் பொது இடங்களில் பதாகைகள் வைத்தும், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் கூட்டங்கள் நடத்தியும், பொது மக்களுக்கு தெரியப்படுத்தி விஜயதசமி நாளன்று 5 வயதுடைய குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 

அங்கன்வாடியில் பயிலும் 5 வயதுடைய குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை: விஜயதாமிநாளன்று அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

பள்ளியைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் உள்ள 5 வயதுடைய குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை விஜயதசமி நாளன்று அரசுப் பள்ளிகளில் சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,  மேலும், விஜயதசமி நாளன்று (26:102020) பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு பெற்றோர்கள் வருகை புரியும் போது அவர்களை இன்முகத்துடன் வரவேற்று குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதுடண் அன்றைய தினமே குழந்தைகளுக்கு விலையில்லாப் பாடபுத்தகங்கள் வழங்க வேண்டும் 



Join Telegram& Whats App Group Link -Click Here