தொடக்கக் கல்வி  உதவி பெறும் பள்ளிகளில்   - 2020.21 ஆம் கல்வி ஆண்டு பணியாளர் நிர்ணயம் அறிவுரை வழங்குதல் - சார்ந்து  தொடக்கக் கல்வி இயக்குநர்  செயல்முறைகள்


ந.க.எண்.010897/எப்/ஜி/2020 நாள்:05.10.2020


தொடக்கக்கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் நிதியுதவி பெறும் தொடக்க , நடுநிலைப்பள்ளிகளில் 30.09.2020 அன்றைய நிலையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்ய கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.


1 அரசாணை நிலை) எண்.231 பள்ளிக் கல்வித் துறை நாள் 11.08.2010ல் தெரிவிக்கப்பட்ட ஆசிரியர் மாணவ விகிதாச்சாரத்தின்படி. ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அவ்வாறு பணியாளர் நிர்ணயம் செய்யப்படும்போது அரசாணை (நிலை) எகண்.261 பள்ளிக் கல்வி ப.க.5(2) த் துறை நாள் 20.12.2018 இல் தெரிவிக்கப்பட்ட தெறிமுறைகளையும் கணக்கில் கொள்ள வேண்டும்.


2. மேற்படி ஆசிரியர் பணியிட நிர்ணயத்தில், EMIS இணையதளப்பதிவு போன்ற தொழில்நுட்ப ஆவணங்கள் மற்றும் வருகைப்பதிவேடு அடிப்படையில் துல்லியமாக  சரிபார்க்க வேண்டும். அரசின் விலையில்லா நலத்திட்டங்கள் வழங்குவதற்கு மேற்படி மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் வழங்கப்படுவதை உறுதி செய்யப்பட வேண்டும். அவ்வாறு இணையதள பதிவுகள் வாமிலாக சரிபாக்கும்போது போலியாக மாணவர்கள் எண்ணிக்கை கண்டறியப்பட்டால் போலியாக கணக்கிடப்பட்ட மாணவர்களுக்கு விலையில்லா நலதிட்டங்கள் பெற்றதற்கு அப்பள்ளித் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியரே முழுப்பொறுப்பேற்க நேசிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


3. சென்ற ஆண்டு ஆசிரியர் பணியாளர் நிர்ணயத்தில் அளிக்கப்பட்டுள்ள மாணவியர்கள் எண்ணிக்கையினையும் தற்போது EMIS இணையதள நிலவரப்படி பதிவிறக்கம் செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையினையும் வருப்பு வாரியாக ஒப்பு நோக்கப்பட்டு, மாணவர் எண்ணிக்கைகளில் ஏற்பட்ட வித்தியாச விவரத்தினை இத்துடன் கணைக்கப்படுள்ள அதற்கான உரிய படிவத்தில் அளிக்கப்படல் வேண்டும்.


4, மேற்படி சட்டம் மற்றும் அரசாணையின்படி , பணியாளர் நிர்ணயமானது ஒவ்வொரு ஆண்டும் 01.08  -ல் உள்ளவாறு மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்படுவது வழக்காகும். ஆனால் கொரோனா நோய் (COVID-19) பெருந்தொற்று காரணமாக இவ்வாண்டு மட்டும், 30.09.2020 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் வருகையின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படல் வேண்டும்.


5. மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் உள்ள பதிவும், EMIS -ஸ் பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கையும் இணையாக இருப்பதை வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.


6 குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம்-2009 பிரிவு 25-ல் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையில் தெரிவிக்கப்பட்டவாறு ஆசிரியர், மாணவர்கள் விகிதாச்சாரம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.


7 மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு உதவிபெறும் தொடக்க நடுநிலைப் பள்ளித் தாளாளர்கள், தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்கள் வருகைப்பதிவேடு விவரங்கள் மற்றும்  EMIS இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட விவரங்களை பதிவிறக்கம் செய்து பள்ளித் தாளாளர். தலைமை ஆசிரியர், மேலெப்பத்துடன் பெறப்பட்ட EMIS -REPORT அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.


8. தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவிபெறும் துவக்கருடுநிலைப் பள்ளிகளின் பெயர் பட்டியகினை முழு முகவரியுடன் தயாரித்து ஒன்றியம் வாரியாக, கல்வி மாவட்டம் வாரியாக, வருவாய் மாவட்டம் இணைக்கப்பட வேண்டும். படிவம்.6)


9 உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் ஈராசிரியர் பணிபுரியும் தொடக்கப் பள்ளிகளின் ஆசிரியர் மாணவர்கள் விகிதாச் சாரப்படி பணியாளர் நிர்ணயம் இணைப்பில் காணும் Excel Sheet TAM Marutham Font தட்டச்சு செய்து 12.10.2020 முதஸ் பகுதியாக இங்வியக்ககத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட வேண்டும்.


10. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம்-2009 பட்டியல் (ிரிவு 19 மற்றும் 25)ல் தெரிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதாச்சாரப்படி அனைத்து உதவிபெறும் துவக்கருடுநிலைப் பள்ளிகளுக்கு தகுதியுள்ள பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு அஆசிரியரின்றி உபரி எனக் கண்டறியப்படும் காலிப்பணியிடத்தினை இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்திட வேண்டும்.


11) ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விகிதாச்சார அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்ட விவரத்தினை படிவம் 1 முதல் 7 வரை உதவிபெறும் தொடக்கப் பள்ளி நடுதிலைப் பள்ளிக்கு தயார் செய்யப்பட வேண்டும்.


12 ஆசிரியருடன் உபரி எனக் கண்டறிப்படும் பணரியிட விவரங்களை அசிரியர் பெயர்பட்டியலுடன் பணியில் அணுமதிக்கப்பட்ட அரசாணையுடன் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவம் 7ல் தயார் செய்யப்பட்டு 29.10.2020 ஆம் தேதிக்குள் இரண்டாம் பசுதியாக புத்தக வடிவில் கல்வி மாவட்டம் வாரியாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் குறிப்புரையுடன் இயக்குநருக்கு சமர்பிக்கப்பட வேண்டும்.


13. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள 1 முதல் 7 வரை உள்ள படிவத்தில் மேற்காண் அறிவுரைகளின்படி ஆசிரியர் மாணவர்கள் விகிதாச்சார அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்ட விவரத்தினை வருவாய் மாவட்ட அளவில் தொகுத்து குறுந்தகட்டிலும் 15.11.2020 அன்று கிடைக்கும் வகையில் அணுப்புமாறு எனவே, மேற்காண் அறிவுரைகளைப் பின்பற்றி. தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அனைத்து அரசு நிதியுதவியெறும் தொடக்க.நடுநிலைப் பள்ளிகளில், 30.09.2020 அன்றைய நிலையில் உள்ளவாறு மாணவர்கள் எண்ணிக்கையினை துல்கியமாக கணக்கில் கொண்டு, பார்வையிற் குறிப்பிட்டுள்ள அரசாணைகளின்படி பணியாளர் திர்ணயம் செய்து ஆணை வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுரைகள் வழங்கிடுமாறும், இதில் எந்த வித புகாருக்கும், சுணக்கத்திற்கும் இடமின்றி செயல்படுமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மீளவும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.