DSE Proceeding For PET Counselling 

அரசு உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் போட்டி தேர்வு மற்றும் இதர விதிமுறை அடிப்படையில் 551  பணி நாடுவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யபட்டுள்ளது 

அவர்களுக்கு EMIS Online  கலந்தாய்வு மூலம் அந்த அந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் 03.11.2020 ,04.11.2020 அன்று நடைபெற உள்ளது.

உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்தாய்வு நடைபெறும் நாள் 
  • 03.11.2020  செவ்வாய் & 04.11.2020  புதன் 

உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்தாய்வு நடைபெறும் இடம் 

  • அந்த அந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் 


கலந்தாய்வு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் 


1 தெரிவுப் பட்டியலில் ( உடற்கல்வி ஆசிரியர்கள் 551) உள்ள பணி நாடுநர்களின் அனைத்து கல்வித் தகுதிகளையும் சரிபார்த்த பின்னரே அவர்களுக்குப் பணிநியமன ஆணை வழங்குதல் வேண்டும். இதில் ஏதேனும் தவறு எற்படின் நியமன அலுவலரே பொறுப்பாவார் எனத் தெரிவிக்கலாகிறது. மேலும், கல்வித் தகுதிச் _ சான்றிதழ்களில் மாறுபட்ட கல்வித் தகுதி இருப்பின் அவ்விரத்தினை ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தெரிவிக்க வேண்டியுள்ளதால் நியமன ஆணையை நிறுத்தி வைத்து அவ்விவரத்தினை தவறாது பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு தெரிவிக்க வேண்டும்

 2 தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் மற்றும் தலைப்பெழுத்தில் பிழைகள் ஏதேனும் இருப்பின் உரிய ஆவணங்களுடன் ஒப்பிட்டு திருத்தம் மேற்கொள்ள வேண்டும். 

3 தெரிவு செய்யப்பட்டவர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை கண்டறிதல் மற்றும் பிற மாநில சான்றிதழ்களை மதிப்பீடு   செய்தல் ஆகியவற்றை விதிமுறைகளுக்குட்பட்டு மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. 

4 பணி நியமனம் ஆணை பெற்றவர்கள் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் பணியில் சேரவில்லைடயனில் உரிய விதிமுறைகளின்படி அவர்களது நியமன ஆணையை அத்து செய்து அதன் விவரத்தையும் பணியில் சேராதவர்களின் பட்டியலையும் இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. 
5 பணிநாடுநர்களின் கல்வித் தகுதிக்கு இணைத்தன்மை சார்ந்த அரசாணை (Equivalence இல்லாத பட்டம்/பட்டயச்சான்றிதழ்களைப் பொறுத்த வரையில்) சரிபார்த்த பின்னர் நியமனம் வழங்குமாறும் தெரிவிக்கப்படுகிறது.

 6 அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் முறையான ஊதிய விகிதத்தில் அமைந்த உடற்கல்வி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விடுபடாமல் அளிக்கப்பட வேண்டும்.

 7 கலந்தாய்வில் பங்கு பெறும் பணி நாடுநர் பிற மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிடத்தினைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் அந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நியமன அலுவலர் என்பதால், நியமன ஆணை தானாகவே (Autimaticaly Generated Record) அந்த முதன்மைக் கல்வி அலுவலர் இணைய தள முகவரிக்கு சென்றுவிடும். அந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பதிவிறக்கம் செய்து நியமன ஆணை வழங்க வேண்டும்.

 PET Counselling  DSE Proceeding  Date :28.10.2020



Join Telegram& Whats App Group Link -Click Here