2020-2021 ஆம் கல்வியாண்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளி மானியத் தொகையை அட்டவணையில் தெரிவித்தபடி  மாவட்டங்களுக்கு விடுவித்தல் மற்றும் அறிவுரை வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.


கோவிட் -19 சூழ்நிலைகளை சமாளிக்க பள்ளி மானிய தொகையில் முன்னுரிமை அடிப்படையில் செலவு செய்யப்பட வேண்டியவைகள் பின்வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 • மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக கை கழுவும் மற்றும் பாதுகாப்பான குடிநீர் வழங்கிட வேண்டும்.
 • பள்ளி வளாகத்தில் சோப்பு மற்றும், கிருமி நாசினி, துப்புரவு செய்ய பயன்படும் பொருள்கள் போன்ற அத்தியாவசிய பொருள்கள் தேவையான அளவில் இருப்பில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
 •  பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்திகரிப்பு பணி தொடர்ந்து நடைபெற வேண்டும்.
 • பள்ளிகளுக்கு தேவையான வெப்ப அளவீட்டு கருவி (Thermal screening) வாங்குவதற்கு பள்ளி மானியத்திலிருந்து செலவினம் மேற்கொள்ளலாம்.
 • மேலும் 2018-19-ஆம் கல்வியாண்டிலிருந்து பள்ளிகளுக்கு வழங்கப்படும் பள்ளி மானியத்தில் குறைந்த பட்சம் 10% சதவிதம் முழுச் சுகாதார திட்டத்திற்குப்  பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 •  மாணவர்கள் கை கழுவும் வசதிக்கு முக்கியத்துவம் அளித்து பள்ளி வளர்ச்சி மேலாண்மைக் குழு தேவையின் அடிப்படையில் முடிவு செய்து அதற்கான தொகையினை முழு சுகாதார திட்டத்திலிருந்து பயன்படுத்த வேண்டும்.
 • பள்ளிகள் திறப்பின் போது மாணவர்கள் கல்வி கற்க உகந்த சூழலை வழங்கும் விதமாக அரசு பள்ளிக் கட்டிடங்களின் உள்கட்டமைப்பு வசதிகளான கை கழுவும் மேடை, சுத்தமான குடிநீர், மின்சார வசதி, கழிவறை ஆகியவற்றினை சமுதாய பங்களிப்புடன் பராமரிக்கும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கி இந்நிதியை பயன்படுத்த வேண்டும்.
 • பள்ளிகளில் இயங்கா நிலையில் உள்ள கற்றல் உபகரணங்களை மாற்றவும், பள்ளியில் ஏற்படும் சிறு தொடர் செலவினங்களான விளையாட்டு உபகரணங்கள், நாளிதழ்கள், மின்கட்டணம், இணையதள வசதி, குடிநீர், கற்றல் கற்பித்தல் பொருள்கள், போன்றவற்றிற்கு இந்நிதியை பயன்படுத்த வேண்டும்.

பள்ளி மேலாண்மை குழு வழியாக SMC  செலவிடுவதற்கான நெறிமுறைகள்


 • பள்ளி மானியம் பெறப்பட்டவுடன் ஒருங்கிணைந்த பள்ளி மானியப் பதிவேட்டில் (வ.எண். பெற்ற தொகை, வங்கி பெயர் மற்றும் நாள்) ஆகியவற்றை தலைமையாசிரியர் பதிவு செய்தல் வேண்டும்.
 • மேற்கூறிய இனங்களில் தேவையான பொருட்களை வாங்குவதற்கு அவசியமானபொருட்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அப்பொருட்களை பட்டியலிட வேண்டும்.பட்டியலிடப்பட்ட பொருட்கள் பள்ளி மேலாண்மைக்குழுவின் தீர்மானத்தின்படி தரமானபொருட்களாக மட்டுமே வாங்கப்பட வேண்டும்.
 • ஒரு செலவினம் ரூ.25,000/-க்கு மேல் மிகுந்தால் சமக்ர சிக்ஷா நிதி மேலாண்மை மற்றும் கொள்முதல் கையேடு 2018 (Financial Management and Procurement Manual) அறிவுரையின்படி கொள்முதல் விதிகளைப் பின்பற்றி பள்ளி மேலாண்மைக் குழு அளவிலேயே கொள்முதல் செய்யப்பட வேண்டும். General Financial Rules (GFR) 145,146 படி உரிய சான்றிதழில் தலைமையாசிரியர் /கொள்முதல் குழுவினர் கையொப்பமிட்டு Procurement File இணைக்க வேண்டும்.
 • கோவிட் 19 சூழ்நிலைகளை சமாளிக்க தேவையான கிருமிநாசினியை நுகர்பொருள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.
 • 31.12.2020  டிசம்பர் 2020)க்குள் பள்ளிகளுக்கு தேவையான பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
 •  பள்ளி திறந்தவுடன் 15 நாள்களுக்கு மிகாமல் கட்டிட பழுதுப்பார்க்கும் பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டும்.
 • நிதி ஆண்டு இறுதியில் ரொக்கக் கணக்குப் புத்தகம் இறுதி இருப்பு ஆகியவை கணக்காளரால் சரிபார்க்கப்பட்டு தலைமையாசிரியர் கையொப்பமிட வேண்டும்
 • பள்ளி மானியத்தில் வாங்கப்பட்ட பொருள்களின் செலவு விவரத்தினை EMIS ல் பதிவு செய்ய வேண்டும்.
 • ஒவ்வொரு மாதழும் பள்ளி மேலாண்மைக்குழு கணக்கர் பள்ளி பார்வையின்போது அப்பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பள்ளி மானியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட வரவு செலவு கணக்குகளை ரொக்கப் பதிவேட்டில் பதிவு செய்வதற்கு ஏதுவாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் வங்கி கணக்கு புத்தகம், ரொக்க பதிவேடு மற்றும் செலவு மேற்கொண்டதற்கான பற்று சீட்டுகளை பள்ளி மேலாண்மைக்குழு கணக்கரிடம் ஒத்திசைவு செய்ய வேண்டும்.
 • பள்ளி மானியத் தொகை  முறையாக செலவிடப்பட்டுள்ளதை உறுதி செய்து பயன்பாட்டுச் சான்றிதழ் (Utilization Certificate - Form -4) மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு 31.03.2021-க்குள் அனுப்பிவைத்தல் வேண்டும்

மாவட்ட அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் 

 • முதன்மைக் கல்வி அலுவலர், உதவி திட்ட அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மாவ ட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் பள்ளி பார்வையின் போது மானியம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டதையும், பொருள்கள் வாங்கப்பட்டுள்ளதையும், அதற்கான பற்றுச் சீட்டுகள், ரொக்கப் பதிவேடு மற்றும் இருப்புப் பதிவேடு ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும்.
 • பள்ளி திறந்தவுடன் பள்ளிகளுக்கு தேவையான பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டதை உறுதி செய்ய வேண்டும்.
 • பள்ளி திறந்தவுடன் சிறு சிறு பழுதுப்பார்க்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டதை உறுதி செய்ய வேண்டும்.
 • முதன்மைக் கல்வி அலுவலர் ஒவ்வொரு வாரமும் மீளாய்வு கூட்டத்தில்பள்ளி மானிய செயல்பாட்டு அறிக்கையை ஆய்வு செய்திடல் (படிவம்- 2 மற்றும் 3) வேண்டும்.
 • ஒவ்வொரு பள்ளியும் பள்ளி மானியத்தில் வாங்கப்பட்ட பொருள்களின் செலவு விவரத்தினை ல் பதிவு செய்ததை உறுதி செய்ய வேண்டும்.
 •  உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர், கல்வி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளி மானியத் தொகை (School Grant) முறையாக செலவிடப்பட்டுள்ளதை உறுதி செய்து பள்ளி வாரியாக பயன்பாட்டுச் சான்றிதழ் 
 • பெற்று மாவட்டத்திற்கன பயன்பாட்டு சான்றிதழ்களை 31.03.2021 க்குள் மாநில திட்ட இயக்ககத்தில் அனுப்பி வைத்தல் வேண்டும் 
 • கள ஆய்வு செய்யும் போது இதனை ஆய்வு செய்ய வேண்டும் 

மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் நாள் – 07.11.2020 Join Telegram& Whats App Group Link -Click Here