Supplementary Exam Original Mark Sheet will be issued from November 17
துணைத்தேர்வு மதிப்பெண் சான்றிதல் நவம்பர் 17 முதல் வழங்கப்படும்
அரசுத் தேர்வுகள் இயக்ககம், துணைத் தேர்வுகள், செப்டம்பர் / அக்டோபர் 2020 அசல் மதிப்பெண் பட்டியல் வழங்குவது தொடர்பான செய்திகுறிப்பு வெளியிட்டுள்ளது அதன் விபரம் பின்வருமாறு
செப்டம்பர் / அக்டோபர் 2020, பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு (+1 Arrear) / இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வெழுதிய தேர்வர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை / மதிப்பெண் பட்டியல்களை 17.11.202(செவ்வாய்க்கிழமை) முதல், அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம்.
பத்தாம் வகுப்பு தேர்வெழுதியவர்ளுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் முறை
நிரந்தர பதிவெண் கொண்டு தேர்வெழுதிய பத்தாம் வகுப்பு தேர்வர்கள், இதற்கு முந்தைய பருவங்களில் தேர்ச்சி பெறாத பாடங்களை, செப்டம்பர் 2020 துணைத் தேர்வில் எழுதி அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பின், அவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ்களும், முழுமையாக தேர்ச்சி பெறாதவர்களுக்கு அவர்கள் தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண்களை மட்டும் பதிவு செய்து மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
நிரந்தர பதிவெண் இல்லாமல் (மார்ச் 2016 பொதுத் தேர்விற்கு முன்னர்) பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய தேர்வர்கள், தற்போது செப்டம்பர் 2020 பொதுத் தேர்வெழுதி இருப்பின், அவர்கள் தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண்கள் மட்டும் பதிவு செய்து மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
புதிய நடைமுறையில் (மொத்தம் 600 மதிப்பெண்கள்) தேர்வெழுதியவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் வழங்கும் முறை
மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகளில்அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும், மேல்நிலை முதலாம் ஆண்டு (600 மதிப்பெண்கள்) மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகளுக்கான (600 மதிப்பெண்கள்) மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியே வழங்கப்படும்.
மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்விலோ / இரண்டாம் ஆண்டு துணைத் தேர்விலோ அல்லது இரண்டு துணைத் தேர்வுகளிலுமோ முழுமையாக தேர்ச்சியடையாத தேர்வர்களுக்கு, அவர்கள் இரு தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்களை பதிவு செய்து அச்சிடப்பட்ட ஒரே மதிப்பெண் பட்டியலாக வழங்கப்படும். இம்மாணவர்கள் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பின்னரே, அவர்களுக்கு பேற்காண் இரு தேர்வுகளுக்கான தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
பழைய நடைமுறையில் (1200 மதிப்பெண்கள்) +2 தேர்வெழுதியவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் முறை
பழைய நடைமுறையில் (1200 மதிப்பெண்கள்) நிரந்தர பதிவெண் ( கொண்டு தேர்வெழுதிய மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வர்கள், இதற்கு முந்தைய பருவங்களில் தேர்ச்சி பெறாத பாடங்களை, செப்டம்பர் 2020 துணைத் தேர்வில் எழுதி அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பின், அவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ்களும், முழுமையாக தேர்ச்சி பெறாதவர்களுக்கு அவர்கள் தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண்களை மட்டும் பதிவு செய்து மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
நிரந்தர பதிவெண் இல்லாமல் (மார்ச் 2016 பொதுத் தேர்விற்கு முன்னர்) மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வெழுதிய தேர்வர்கள், தற்போது செப்டம்பர் 2020 பொதுத் தேர்வெழுதி இருப்பின், அவர்கள் தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண்கள் மட்டும் பதிவு செய்து மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
செப்டம்பர் / அக்டோபர் 2020, பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் ஏற்பட்டவர்களுக்கு மட்டும் மறுகூட்டல் முடிவிற்கு பின்னர் புதிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். அதே போன்று, மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகளுக்கான மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு) விண்ணப்பித்தவர்களுள் மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களுக்கு மட்டும் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிட்ட பின்னர் புதிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். இதற்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும். என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தனது செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.
மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள் நகல் 18ம் தேதி வெளியாகிறது.
www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விடைத்தாள் நகலை தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..